255 teacher arrested for sexual offences in Tamil Nadu
தமிழகத்தில் 255 ஆசிரியர்கள் பாலியல் குற்றவாளிக்கில் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை நடைபெற்று வருகிறது அதுவும் குறிப்பாக பள்ளி குழந்தைகளிடம் பாலியல் சீண்டல் என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மாவட்டத்தில் இருந்து பாலியல் சீண்டல் தொடர்பான செய்திகள் வெளிவருகிறது கிருஷ்ணகிரி என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது கிருஷ்ணகிரியில் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு பள்ளி மாணவியை 3 ஆசிரியர்கள்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது அதனால் அந்த பெண் கர்ப்பமானது கரு கலைக்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் வெடித்தது கடந்த ஆண்டு தான் தனியார் பள்ளியில் போலியான NCC கேம்ப் என 17 பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்த ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.
இப்படி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக தமிழக அரசு ஒரு முக்கியமான அறிக்கை வெளியிட்டுள்ளது அதாவது பாலியல் வன்கொடுமையில் இதுவரை 255 ஆசிரியர்கள் சிக்கி உள்ளார்கள்.
இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது பணி நீக்கம், கட்டாயம் ஓய்வு, போன்றவை எடுக்கப்பட்டு வருகிறது மேலும் அவர்களின் கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்கள்.
இது தொடர்பான அரசாணை ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்தார்கள் 2012 ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள.
அதில் பள்ளி மாணவ மாணவியர்களிடம் ஒழுக்க கேடான முறையில் நடந்து கொள்ளும்,ஆசிரியர்களின் மீது கட்டாயம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது..!
பாலியல் வன்கொடுமை என்பது வேதனைக்குரிய செயல் அதுவும் பள்ளி குழந்தைகளிடம் என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது முதல் கட்ட விசாரணையில் தொடக்கக்கல்வித்துறையில் 80 ஆசிரியர்கள்.
பள்ளி கல்வித்துறையில் 175 என மொத்தம் 255 ஆசிரியர்கள் பாலியல் புகாரில் சிக்கி உள்ளது தெரிய வந்துள்ளது அவர்கள் மீதான குற்றச்சாட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆய்வு செய்ய உள்ளார் அதன் பின்பு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |