4ம் வகுப்பு கட்டிடத்திற்குள் கூரை பெய்து விழுந்து 7 குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது..!7 students injured after government school roof collapses in Dindigul

7 students injured after government school roof collapses in Dindigul

ஒரு மாதத்திற்கு முன்புதான் பள்ளி சீரமைக்கப்பட்டது 4ம் வகுப்பு கட்டிடத்திற்குள் கூரை பெய்து விழுந்து 7 குழந்தைகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் திண்டுக்கல் சந்தைப்பேட்டை ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு கட்டிடத்தின் கூரை விழுந்து 7 மாணவர்கள் காயம் அடைந்துள்ளது என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது.

இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்கிறார்கள் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள் இங்கு உள்ள வகுப்பறை கட்டடங்கள் 2009 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.

இத்தனை ஆண்டுகள் மாணவர்கள் பயன்பாட்டில் இருந்தது இருந்தாலும் அந்த பள்ளி முழுவதும் பல்வேறு இடங்களில் பெயர்ந்து விழுதல், கட்டிடங்கள் சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தது.

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திற்கு இது குறித்து பள்ளி நிர்வாகம் பள்ளி சேதம் அடைந்துள்ளது என்று தெரிவித்தது மாநகராட்சி குழு அமைத்து பள்ளியை ஆய்வு செய்து 3 மாதங்களுக்கு முன்புதான் பள்ளி சேதம் சீரமைக்கப்பட்டது.

புதிதாக பெயிண்ட் அடிக்கப்பட்டது பணிகள் மேற்கொள்ளப்பட்டது அதேபோன்று 4ம் வகுப்பு கட்டிடத்திலும் ஒரு மாதத்திற்கு முன்புதான் பணிகள் முடிக்கப்பட்டது இன்று மார்ச் 7ஆம் தேதி வழக்கம் போல் வகுப்புகள் நடந்த நிலையில்.

மதியம் 4ம் வகுப்பில் 40க்கு மேற்பட்ட குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தார்கள் அப்போது திடீரென்று வகுப்பின் கூரை இடிந்து மாணவர்கள் தலையில் விழுந்தது இதில் திண்டுக்கல்லை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது.

ஆணவத்தின் உச்சியில் ஆடும் அண்ணாமலை பிஜேபி கூட்டணிக்காக தமிழக கட்சிகள் வரிசையில் காத்திருக்கிறது..!

உடனே அச்சமடைந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்கள் தகவல் அறிந்த அதிகாரிகள் பெற்றோர்கள்.

காவல்துறையினர் அந்த இடத்திற்கு குவிந்தார்கள் இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தியது தற்போதும் விசாரணையில் தான் இருக்கிறார்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment