தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது..!The number of sexual crimes in TN has been increasing continuously

The number of sexual crimes in TN has been increasing continuously

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது இதுவரை 120க்கும் மேற்பட்ட POCSO CASE பதிவு செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு நாளும் கூட்டு பாலியல் வன்கொடுமை.

தொடர்பாக செய்திகள் வெளிவந்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது இதற்கு என்ன காரணம் ஏன் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது காவல்துறை குற்றவாளிகளை சுட்டு பிடித்தாலும் அல்லது பிடிக்கும் போது.

எலும்பு முறிவு ஏற்பட்டது என்று தெரிவித்தாலும் என்ன காரணத்தால் பாலியல் குற்றங்களில் எண்ணிக்கை குறையவில்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை.

பல மடங்கு அதிகரிக்கிறது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தூத்துக்குடியில் நடந்த சம்பவம் என்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது காதல் திருமணம் செய்த இளைஞர் தன்னுடைய மனைவியை.

தன்னுடைய சமுதாய மக்கள் குடியிருக்கும் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார் பணி நிமித்தம் காரணமாக கேரளா சென்றுள்ளார் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட இரண்டு இளைஞர்கள்.

இரவு வேளையில் மது அருந்திவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழந்தை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்கள் மறுபடியும் இரவு 2 மணிக்கு அந்த பெண்ணின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து.

குழந்தையை கொன்று விடுவதாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்கள் இதைப்பற்றி காவல்துறையிடம் தெரிவித்தால் உன்னுடைய குழந்தையை கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு சென்றுள்ளார்கள்.

கடும் சோர்வுடன், மன அழுத்தத்தில் இருந்த அந்த பெண்ணை பார்த்த அக்கம் பக்கம் நபர்கள் விசாரணை நடத்தியுள்ளார்கள் ஆனால் அந்த பெண் எதுவும் தெரிவிக்காமல் இருந்ததால் அவருடைய கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

விரைந்து வந்த கணவர் அந்த பெண்ணிடம் ஏன் இப்படி இருக்கிறார் என்று கேட்டுள்ளார் அதற்கு அந்த பெண் தனக்கு நடந்த கொடுமையை பற்றி தெரிவித்துள்ளார் உடனடியாக அதிர்ந்து போன கணவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறை ஒரு நபரை சுட்டுப் பிடித்துள்ளது, ஒரு நபர் பிடிக்கும்போது தப்பித்து சென்றார் அப்போது அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்

இதுபோன்ற பாலியல் வன்புணர்வு சம்பந்தமான செய்திகள் வெளி வந்தால் உடனடியாக காவல்துறை சுட்டுப் பிடிக்கிறது அல்லது அவர்கள் பிடிக்கும்போது எலும்பு முறிவு ஏற்படுகிறது என காவல்துறை தெரிவிக்கிறது.

இதுவரை இந்த 10 நாட்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது கிருஷ்ணகிரியில் கூட்டு பாலியல் வன்கொடுமை காரணமாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டார்கள் அப்பொழுது.

ஒரு நபரை காவல்துறை சுட்டு பிடித்தது,காவல்துறை என்ன தான் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்தது இல்லை.

பாலியல் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்

குறிப்பாக போதைப் பொருள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது என பெண்கள் தெரிவிக்கிறார்கள் தமிழகத்தில் டாஸ்மார்க் மதுபான கடை மதியம் 12:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை செயல்படுகிறது, ஆனால் திமுக ஆட்சியில் 24 மணி நேரமும் மறைமுகமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குடிமகனும் இங்க திட்டத்தை பற்றி..!

என செய்திகள் சமூக வலைத்தளங்களில் வெளி வருகிறது மேலும் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக உலா வருகிறது என மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்ந்து போதை பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது இதன் காரணமாக மட்டுமே பாலியல் வன்கொடுமை பல மடங்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment