Lok Sabha seats in Tamil Nadu will be reduced from 38 to 31
இந்தியா முழுவதும் தொகுதி மறுசீரமைப்பால் தமிழக லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 38 லிருந்து 31 ஆக குறையும் இதனை தடுப்பதற்கு திமுக அரசு அனைத்து கட்சி கூட்டத்தையும் அழைத்துள்ளது.
எதனால் இது போன்ற சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது என்பதை முழுமையாக பார்க்கலாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடைமுறைகளை வகுத்தது.
அதனை தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்கள் சரியாக பின்பற்றினார்கள் இதனால் இந்த மாநிலங்களில் மக்கள் தொகை உயர்வு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் தொகை நெருக்கம் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்று மத்திய அரசு தற்போது சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இதனால் தமிழகத்தில் 7 தொகுதிகள் குறைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
இதுவே வட மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை குறையவில்லை மாறாக அதிகரித்துள்ளது அதாவது இந்தியாவில் கல்வி அறிவு உள்ள மாநிலங்களில் மக்கள் தொகை கட்டுப்பாட்டில் உள்ளது.
குழந்தைகள் பிறப்பு விகிதம் சராசரியாக 1.1% குறைந்துள்ளது என மாநில அரசு மற்றும் மத்திய அரசு நிலவரம் தெரிவிக்கிறது ஆனால் இதுவே இந்தி மொழி மற்றும் வட மாநிலங்களின் எண்ணிக்கை அதற்கு நேர் மாறாக இருக்கிறது.
உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், ஹரியானா, குஜராத், டெல்லி, சத்தீஸ்கர், போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை குறையவில்லை அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதிலும் கொந்தளிப்பில் இருக்கிறது
ஏற்கனவே மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே உங்களுக்கு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது இதனால் தமிழ்நாட்டிற்கு 2,000/- கோடி இழப்பு ஏற்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி பிறப்பு விகிதத்தை நாம் கட்டுப்படுத்தி விட்டோம் ஆனால் தற்போது பிறப்பு விகிதம் மிகக் குறைந்த அளவில் தமிழகத்தில் இருக்கிறது இது நமக்கு ஆபத்தாக இருக்கிறது.
கல்வி அறிவு சரியாக இருப்பதால் நாம் அனைத்தையும் சரியாக பின்பற்றுகிறோம் இதனால் மத்திய அரசு நம் மாநிலத்தில் 7 தொகுதிகளை குறைக்க புதிய முயற்சி எடுத்து வருகிறது இதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும்.
அதனால் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டுகிறேன் கலந்து கொள்ளுங்கள் மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுப்போம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது இது தொடர்பாக மார்ச் 5ம் தேதி தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டியுள்ளது திமுக அரசு.
தமிழகத்தில் ஏற்கனவே மொழி பிரச்சனை தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசு சிக்கி உள்ளது, தற்போது தொகுதி மறுசீரமைப்பால் 2026 ஆம் ஆண்டு பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தாலும் தோல்வி என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |