நம்மளுடைய ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டது எத்தனை புதிய அறிவிப்புகளை..!DMK has lost the trust of the people of Tamil Nadu

DMK has lost the trust of the people of Tamil Nadu

நம்மளுடைய ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டது எத்தனை புதிய அறிவிப்புகளை வெளியிட்டாலும் மக்கள் கண்டு கொள்ளவில்லை..!

வரவேற்பு இல்லை என்பதை திமுகவின் தலைமை உணர்ந்து விட்டது அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் புதிய திட்டத்திற்கு தயாராகிறார்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில்.

523 வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்தார் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பட்ஜெட்டில் பெட்ரோலுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது மகளிருக்கு இலவச பயணம் தொடங்கப்பட்டது.

அதன் பிறகு ஆட்சியின் அலங்கோலங்கள் என்பது உச்சகட்டத்தில் இருந்தது 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடைபெற்றது அப்பொழுது என்ன வாக்குறுதி கொடுத்து வாக்கு சேகரிப்பது என்பது திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.

ஏனென்றால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படவில்லை மக்களிடம் எதை தெரிவித்து வாக்கு கேட்பது என்பது திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருந்தது.

உடனடியாக திரு மு க ஸ்டாலின் அவர்கள் நடைபெறுகின்ற பட்ஜெட் கூட்டத்தில் மகளிர்க்கு 1,000/- ரூபாய் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டார் அதே போன்று ஒரு அறிவிப்பை வெளியிடப்பட்டது.

அதாவது அண்ணா பிறந்தநாள் அன்று செப்டம்பர் 15ஆம் தேதி மகளிர்க்காண 1,000/- ரூபாய் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டார் அதுபோக சில திட்டங்களை தொடங்கினார் அவ்வளவு தான்.

மற்றபடி அவர் தெரிவித்த வாக்குறுதிகள் பெரும்பாலானவை 95 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை தற்போது மக்களிடத்தில் ஸ்டாலின் அலை வீசுகிறது என புதிய யோசனைகளை முன்னெடுக்கிறார்கள் ஆனால் மக்களிடத்தில் அவ்வளவாக கவனம் பெறவில்லை.

அப்பா என்ற புதிய வாசகம்..!

தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்திப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார் சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்று வெளியிட்டார் அதில் தன்னை இளைய தலைமுறைகள் அப்பா என்று அழைப்பதை பெருமையாக கொள்கிறேன் என அந்த வீடியோவில் தெரிவித்தார்.

அந்த வீடியோ தமிழகம் முழுவதிலும் வைரலாகும் திமுகவிற்கு நன்கு வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதற்கு நேர் மாறாக இளைய சமுதாயம் அந்த வீடியோவை வைத்து கேலி கிண்டல்கள் செய்ய தொடங்கிவிட்டது.

இவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை மக்கள் கவனத்தில் கொள்ளவில்லை மேலும் அவற்றை எளிமையாக கடந்து செல்கிறார்கள் இவர்கள் தெரிவிப்பது பொய் இவர்களுடைய ஆட்சியில் பாதுகாப்பு இல்லாதவை என மக்கள் உறுதியாக நம்பி விட்டார்கள்.

CBSE தேர்வு முறையில் வருகிறது புதிய மாற்றம் 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுதேர்வு..!

இதனால் எத்தனை புதிய அறிவிப்புகளை வெளியிட்டாலும் மக்கள் கண்டு கொள்வதில்லை என்பதை திமுக தலைமை கழகம் உணர்ந்துவிட்டது.

எப்படியாவது மக்களிடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்பதை தற்போது அவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள் இதுவரை பல்வேறு முயற்சிகள் செய்து அனைத்தும் வீணாகிவிட்டது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment