புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகள் என்ன..!What are the procedures for getting electricity connection for a new home

What are the procedures for getting electricity connection for a new home

புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகள் என்ன..!

நீங்கள் புதிதாக வீடு கட்டும் நபராக இருந்தால் தமிழகத்தில் மின் இணைப்பு பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது இதற்கான கட்டணங்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது புதிதாக மின் இணைப்புபெறும் நடைமுறையும்.

மின்கம்பம் அகற்றுதல், மின்பாதை மாற்றி அமைத்தல், மின்சாதனங்களை இடமாற்றம், போன்றவை எளிமையாகப்பட்டுள்ளது நீங்கள் புதிதாக வீடு கட்டக்கூடிய நபராக இருக்கலாம் அல்லது பழைய கட்டிடத்தை மாற்றி புதுப்பித்து மின் இணைப்பு பெறுவதற்கான நடைமுறைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.

இதற்கான படிவம்-1 வாங்கி பூர்த்தி செய்து மின்சார வாரியத்தில் நீங்கள் கொடுக்க வேண்டும் இந்த விண்ணப்ப படிவத்திற்கு அரசாங்கம் எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சில அடிப்படை தகவல்களுக்கு நீங்கள் சரியாக பதிலளிக்க வேண்டும்.

நீங்கள் மின் இணைப்பு தேவைப்படும் இடத்திற்கு உரிமையாளர்கள் நீங்கள் தான் என்பதற்கான அரசாங்கம் வழங்கியுள்ள ஆவணங்களை கட்டாயம் வழங்க வேண்டும்.

நீங்கள் இப்பொழுது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் உங்களுக்கு மின்  இணைப்பு வழங்க வேண்டும் இல்லையென்றால் மறுப்பதற்கான காரணத்தை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் மின் இணைப்பு பெற நீங்கள் செலுத்த வேண்டிய தொகை 1,600/- ரூபாயிலிருந்து 2,000/- ரூபாய்க்குள் இருக்கும்.

மின் இணைப்பு கேட்கும் நபர் அதற்கான கட்டணத்தை உரிய காலத்திற்குள் செலுத்த வேண்டும்.

நீங்கள் அடுக்குமாடி கட்டிடம் கட்டுகிறீர்கள் என்றால் அனைத்து தளங்களுக்கான மின் மீட்டர் பொருத்துவதற்கான இடம் தரைதளத்தில் வழங்க வேண்டும்.

மின் இணைப்பு கோருவோர் தன்னுடைய இடத்தில் இலவச மின்சார வாரியத்திற்கும் மின் கம்பங்கள் நடுவதற்கும் மற்றும் மின் இணைப்பு கோருவோர் தன்னுடைய சொந்த செலவில் மின் கம்பங்கள் மின்கம்பிகள் போன்றவற்றை அமைப்பதற்கான வழிதடத்தை கட்டாயம் அமைத்து கொடுக்க வேண்டும்.

தாங்கள் கட்டியுள்ள புதிய கட்டிடத்தில் அனைத்து வயரிங்களையும் உரிய அரசு அங்கீகாரம் பெற்றவர்களால் வேலை செய்து முடிக்கப்பட வேண்டும்.

ஒரு நிலத்திற்கு தேவையான முக்கியமான ஆவணங்கள் என்ன..!

மின் பணி முடிந்ததும் நுகர்வோர் அலுவலகங்களில் தனது நிறுவல் அமைப்பின் பணி முடிந்து சோதனை செய்து அது மேலும் பொறியாளர் ஆய்வு மற்றும் சோதனைக்கான ஆயத்தமான உள்ளதை பொறியாளருக்கு அறிவிக்க வேண்டும்.

மின் இணைப்பு கொடுப்பதற்கு பணிகள் நிறைவு பெற்று ஆய்வு செய்த பின் உரிய காலத்திற்குள் இணைப்பினை பெற்றுக்கொள்ளுமாறு மின் இணைப்பு கோருவோற்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment