நள்ளிரவு வரை சீமானியிடம் நடந்த விசாரணை காவல் நிலையத்தில் என்ன நடந்தது..!Seeman was questioned at the police station until midnight

Seeman was questioned at the police station until midnight

நள்ளிரவு வரை சீமானியிடம் நடந்த விசாரணை காவல் நிலையத்தில் என்ன நடந்தது..!

சீமான் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது என்ன சீமானுக்கு தற்போது தலைவலியாக இருப்பது நடிகை விஜயலட்சுமி இதை வைத்துதான் திமுக சீமானுக்கு அவ்வப்போது குடைச்சல்களை கொடுத்து வருகிறது.

சாதாரண ஒரு சம்மன் ஒட்டும் நிகழ்வுக்கு சீமான் வீட்டில் மிகப்பெரிய பிரச்சனையை திமுக உருவாக்கி விட்டது மறைமுகமாக, நீதிமன்றம் 3 மாதம் கால அவகாசம் கொடுத்துள்ளது ஆனால் மூன்றே நாளில் எதற்காக இவ்வளவு வேகம் காட்ட வேண்டும் என சீமான் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கு எனக்கு தொல்லையாக இருக்கிறது இதனை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன் இதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள் 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சி இருந்தது.

அப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை அந்த அம்மா வந்து வழக்கு தொடுக்கவில்லை 2021 ஆம் ஆண்டு அந்த அம்மா வந்து வழக்கு தொடுத்தார்கள் எனக்கு இடையூறு செய்தார்கள் மீண்டும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது.

அந்த அம்மா வந்தார்கள் வழக்கு தொடுத்தார்கள் இதே போன்ற பிரச்சனை செய்தார்கள் மீண்டும் 2026 ஆம் ஆண்டு அந்த அம்மா வரப்போகிறார்கள் வழக்கு தொடுக்க போகிறார்கள் என்று தெரிந்து கொண்டு.

நானே வழக்கு தொடுத்துள்ளேன் என்று சீமான் தெரிவித்துள்ளார் இதற்கு முன்பு என்னிடம் கேட்ட அதே கேள்வியை தான் தற்போது கேட்டுள்ளார்கள் நான் தேவையான விளக்கத்தை கொடுத்துள்ளேன் தேவை என்றால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றார்கள்,நானும் சரி என்று சொல்லிவிட்டேன்.

என்னை அசிங்கப்படுத்த திமுக முயற்சிக்கிறது

நான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன் அந்த மனு மிக விரைவில் விசாரணைக்கு வரும் நிலையில் தற்போது விசாரணையை தீவிரமாக்கியுள்ளது காவல்துறை மூலம் எனக்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறது.

இதற்கெல்லாம் நான் பயந்தவன் இல்லை வீட்டில் யாரும் இல்லை என்பதால் சம்மனை ஒட்டியதாக தெரிவிக்கிறார்கள் சம்மனை ஒட்டுவது மட்டுமே உங்களுடைய வேலை ஓட்டும்போது தடுத்தால் மட்டுமே பணி செய்ய விடாமல் தடுத்ததாக குற்றம்.

ஒட்டிய பிறகு அதை வைத்து பூஜை செய்ய முடியுமா கிழிப்பது குற்றமில்லை என்னை 8:00 மணிக்கு வரச் சொன்னார்கள் பிறகு 10 நிமிடம் 10 நிமிடம் என காவல்துறையினர் காலதாமதம் செய்தார்கள் முதல்வர் நிகழ்ச்சியாகவே என்னை தாமதப்படுத்தியுள்ளார்கள்.

சீமானிடம் 3 மணி நேர வழக்கு விசாரணை நிறைவு அவர் கைது செய்யப்படவில்லை..!

திமுக காவல்துறையை வைத்து எனக்கு அழுத்தத்தை கொடுக்கிறது கருணாநிதி என்னை கைது செய்து, கைது செய்து, தலைவராக மாற்றினார் தற்போது அவருடைய மகன் என்னை கைது செய்து, கைது செய்து, முதல்வராக மாற்றி விடுவார் என சீமான் காட்டமான ஒரு பதிலடி கொடுத்துள்ளார்.

இதேபோன்று என்னை தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தால் 2026 ஆம் ஆண்டு ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் உங்களுடைய நிலைமையை புரிந்து கொள்ளுங்கள் என்பது சீமானுடைய கருத்து.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment