Annamalai says TN parties are waiting to form an alliance with BJP
ஆணவத்தின் உச்சியில் ஆடும் அண்ணாமலை பிஜேபி கூட்டணிக்காக தமிழக கட்சிகள் வரிசையில் காத்திருக்கிறது..!
இதுபோன்ற ஒரு பொய்யை அண்ணாமலையால் மட்டுமே தெரிவிக்கப்படுகிறது 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிஜேபியுடன் எந்த கட்சியின் கூட்டணி வைக்காமல் பிஜேபி தனித்து நிற்கப் போகிறது.
இப்பொழுது கூட்டணி குறித்து பல்வேறு தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளிவந்து கொண்டிருக்கிறது தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடம் இருக்கிறது கூட்டணி இப்பொழுது உறுதி செய்யப்பட முடியாது. .
இன்னும் கட்சியை பலப்படுத்த அந்த கட்சி தலைவர்கள் தமிழக முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள் தற்போது தான் அரசியல் களம் சூட்டுபிடிக்க தொடங்கியுள்ளது அப்படி இருக்கும் சூழ்நிலையில்.
மறுபடியும் மறுபடியும் அண்ணாமலை பொய்யை பேசி வருகிறார் இதற்கு முன்பு அதிமுக பிஜேபி கூட்டணி இருந்தபோது அந்த கூட்டணியை வேண்டுமென்றுற உடைக்க வேண்டும் என்று அண்ணாமலை பல்வேறு பொய்களை தெரிவித்து.
கூட்டணியை உடைத்தார் அரசியல் தலைவர்களில் அதிகமாக பொய் பேசக்கூடியவர் அண்ணாமலை இதுவரை என்னுடைய வாழ்நாளில் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்தேன் என மிகப் பெரிய ஒரு பொய்யை தெரிவித்தார்.
மிகப்பெரிய அறிஞரர்களாக இருக்கும் நபர்கள் கூட அவர்களுடைய வாழ்நாளில் அத்தனை புத்தகங்களை படித்திருக்க முடியாது அண்ணாமலை சிறிது நாட்கள் தமிழகத்தில் இல்லாமல் இருந்த காலம் தமிழகத்தில் பொய்கள் பேசுவது குறைவாக இருந்தது,தற்போது மீண்டும் அண்ணாமலை பொய்களை அதிகமாக பேசி வருகிறார்.
பிஜேபியுடன் நிச்சயம் 2026 இல் யாரும் கூட்டணி வைக்க மாட்டார்கள்..!
இங்கு மோடி வேண்டுமா என்பது 2026 ஆம் ஆண்டு தேர்தல் இல்லை எடப்பாடி கே பழனிசாமி மற்றும் மு க ஸ்டாலின் இவர்கள் இடையில் தான் தேர்தல் நடைபெறுகிறது அதனால் யார் வெற்றி பெற்றால் ஆட்சி நன்றாக இருக்கும் என்பது தமிழக மக்களின் முடிவில் இருக்கிறது.
நடிகர் விஜய் தொடங்கிய கட்சி இன்னும் கூட்டணி குறித்து முழுமையாக நிறைவு செய்யவில்லை அப்படி இருக்கும் சூழ்நிலையில் எங்களுடன் கூட்டணி வைப்பதற்கு கட்சிகள் காத்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை திமிருடன் பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணாமலை தெரிவித்த கருத்து என்பது அவருக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியது தென் மாவட்டங்களில் 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக என்ற ஒரு கட்சியை இருக்காது என்று தெரிவித்தார்.
நாங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி என்று தெரிவித்தார் நாங்கள்தான் 2ம் இடம் பிடிப்போம் என்று தெரிவித்தார் நாம் தமிழர் என்ற ஒரு கட்சி காணாமல் போய்விடும் என்று தெரிவித்தார் அவர் தெரிவித்தது அனைத்தும் அவருக்கு நேர் எதிர் மாறாக அமைந்தது.
நாம் தமிழர் கட்சி மாநில அந்தஸ்து கட்சியாக மாறியது அதிமுக வழக்கம்போல் 2ம் இடம் பிடித்து நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று தெரிவித்தது மேலும் அதிமுகவின் வாக்கு வாங்கி 2019 விட 3 சதவீதம் அதிகரித்து உள்ளது.
தற்போது பாமக, பிஜேபி உடன் கூட்டணி உறவை முறித்துக்கொள்ள தயாராக இருக்கிறது ஏனென்றால் 2024 ஆம் ஆண்டு பாமக அதிமுக கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் 3 தொகுதிகளில் வெற்றி பெற்று இருப்பார்கள்.
ஆனால் பிஜேபியுடன் கூட்டணி வைத்து அவர்களுடைய சொந்தத் தொகுதி தர்மபுரியில் கூட வெற்றி பெற முடியவில்லை மீண்டும் பிஜேபியுடன் கூட்டணி வைத்தால் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தோல்வி என்பதை பாமக உணர்ந்து கொண்டது.
ஏற்காடு மலைப்பாதையில் காதலியை விஷ ஊசி போட்டுக் கொன்ற காதலன்..!
பாமக பிஜேபியுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் மற்றவர்கள் யாரும் கூட்டணி வைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை பிஜேபி கூட்டணி கட்சிகளுக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை.
யாரும் பிஜேபியுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்பது உறுதியாகிவிட்டது அதனுடைய அதிர்ச்சி வழிபாடுதான் அண்ணாமலை இது போன்ற பொய்களை தெரிவித்து வருகிறார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |