மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு கொடுமையிலும் உச்ச கட்டம் தமிழகத்தில் தான் நிகழ்ந்துள்ளது..!Pregnant woman dies in Thoothukudi due to lack of doctor

Pregnant woman dies in Thoothukudi due to lack of doctor

மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு கொடுமையிலும் உச்ச கட்டம் தமிழகத்தில் தான் நிகழ்ந்துள்ளது..!

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகிறார்கள் முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை.

பாலியல் குற்றங்கள் என்பது ஒவ்வொரு நாளும் பல மடங்கு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் அம்மா கிளினிக் என்று 2000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட்டது.

ஆட்சி மாற்றம் காரணமாக இந்த 2000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் திமுக அரசு மூடிவிட்டது இதனால் பல்வேறு உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள சிறுபாடு கிராமத்தை சேர்ந்த ஷாகிரா நிறைமாத கர்ப்பிணி பெண் பிரசவ வலி காரணமாக புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் தினத்தன்று திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய விஜய் பாதுகாப்பான தமிழகம் வேண்டும்..!

மருத்துவர் இல்லாத காரணத்தால் செவிலியர்கள் சிகிச்சை அளித்துள்ளார்கள் இருந்தும் முறையான சிகிச்சை இல்லாததால் கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் அதன் பின்பு ஆத்திரமடைந்த குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும்.

நண்பர்களும் திமுக அரசு எதிராக கடுமையான தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தினார் நீதி வேண்டி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment