25 Govt teachers dismissed over sexual harassment allegations
பாலியல் புகாரில் சிக்கிய 25 அரசு ஆசிரியர்கள் டிஸ்மிஸ் என்ன நடந்தது..!
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்புக்கு வந்தது முதல் பாலியல் புகார்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் 3 POCSO வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்படுகிறது.
POCSO வழக்குகள் பதிவு செய்யும் எண்ணிக்கை திடீரென்று பல மடங்கு உயர்ந்துள்ளது என்று கோவை நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் போதைப்பொருள் நடமாட்டம் தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறான பாலியல் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பாக பள்ளியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை தமிழகத்தில் 238 அரசு ஆசிரியர்கள் பாலியல் குற்றம் வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது அதில் 25 நபர்கள் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அந்த 25 நபர்கள் தற்போது அரசு பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்கள் மேலும் அவர்களுடைய சான்றிதழை ரத்து செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் இருந்து செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தர்மபுரி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் தல ஒருவர் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பணி நீக்கம் செய்யப்படும் அவர்களின் சான்றிதழ் ரத்து செய்யப்படும் எனவும் ஏற்கனவே அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பள்ளிக்குழந்தைகள் பாலியல் புகாரில் பாதிப்படைவது என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது பொதுமக்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை.
உள்ள குழந்தைகள்தான் அதிகமாக இது போன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு பாதுகாப்பான கல்வி வழங்க வேண்டும் என அனைவரும் குரல் கொடுத்து வருகிறார்கள் அரசு இதுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |