There are chances of a Rs 10 price hike on a bag of cement in TN again
தமிழகத்தில் மீண்டும் அதிரடியாக சிமெண்ட் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது தமிழக அரசு வரி விதிப்பால்..!
தமிழகத்தில் சிமெண்ட் நிறுவனங்கள் வெட்டி எடுக்கும் சுண்ணாம்புக்கல் மீது ஒரு டன்னுக்கு 160 ரூபாய் தமிழக அரசு கூடுதலாக வரி விதித்துள்ளது இதனால் சிமெண்ட் விலை 10 ரூபாய் வரை உயர்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் சுண்ணாம்புக்கல் மீது கூடுதலாக 160 ரூபாய் வரி விதிக்கப்படும் என தமிழக அரசு சட்டசபையில் அறிவித்துள்ளது இது வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில்.
தமிழகத்தை சேர்ந்த சிமெண்ட் நிறுவனங்கள் தங்களுடைய மூலச் செலவுகள் அதிகரிக்கும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்கள் தமிழக நிலங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் சுண்ணாம்பு கல்லுக்கு ஏற்கனவே ராயலட்டி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில்.
தற்போது கூடுதல் வரிவிதிப்பால் சிமெண்ட் உற்பத்தி செலவு நிச்சயம் அதிகரிக்கும் என டால்மியா, பாரத், ராம்கோ, போன்ற சிமெண்ட் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் குறிப்பாக தமிழக நிலங்களில் இருந்து சிமெண்ட் தயாரிப்புக்கு சுண்ணாம்புக்கல் பெறுவதில் டால்மியா பாரத் நிறுவனங்கள் 23 சதவீதமும் ராம்கோ சிமெண்ட் 52 சதவீதமும் பங்கு வகிக்கிறது.
அல்ட்ராடெக் 4 சதவீதமும், ஏசிசி 2 சதவீதமும் அளவுக்கு மட்டுமே சுண்ணாம்புக்கல் பெறுவதால் இந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு குறைவு சுண்ணாம்பு கல்லை நிலத்திலிருந்து சிமெண்ட் தொழிற்சாலைக்கு எடுத்து செல்வதற்கு முன்பே.
ஒரு டன்னுக்கு 160 ரூபாய் என்ற அளவில் இந்த வரியை முன்கூட்டியே கட்ட வேண்டும் என கட்டாயமாக உத்தரவிடப்பட்டுள்ளது சிமெண்ட் தயாரிப்பில் 65 சதவீதம் வரை சுண்ணாம்புக்கல் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
தமிழக டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது..!
இந்த வரி விதிப்பால் நிச்சயம் தங்களுக்கு உற்பத்தி செலவு அதிகரிக்கும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளது எனவே வேறு வழியில்லாமல் ஒரு மூட்டை சிமெண்ட் மீது குறைந்த பட்சம் 10 ரூபாய் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என கட்டுமான துறை சார்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வர்த்தக போட்டியால் தமிழகத்தில் சிமென்ட் விலை தற்போது உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழகத்தை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் கூடுதல் வரி விதிக்க கூடும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |