AIADMK Vijay alliance confirmed for 2026
நிச்சயமாக அதிமுக விஜய் கூட்டணி அமைவது உறுதி செய்யப்பட்டது விஜய் 2வது ஆண்டு விழாவில் பேசிய பேச்சு அப்படி அமைந்துள்ளது எப்படியாவது உங்கள் ஆட்சியை நான் அகற்றியே தீர்வேன் என சபதம் எடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் 2வது மாநில மாநாடு நேற்று கோலாகலமாக சென்னையில் நடந்தது அதில் விஜய் பேசிய பேச்சு மற்றும் அவருடைய கட்சி நிர்வாகிகள் பேசிய பேச்சு என்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் ஒரு வார்த்தையை அடிக்கடி பேசி வருகிறார் பாஜகவும் திமுகவும் ஒரே தட்டில் வைத்து வருகிறார் முதல் மாநாட்டில் விக்கிரவாண்டியில் விஜய் திமுக பாஜக கள்ளக் கூட்டணியில் இருக்கிறார்கள்.
உங்களுடைய கள்ளக் கூட்டணி பற்றி மக்களுக்கு தெரியும் என பேசிய பேச்சு கடும் அதிர்ச்சியை திமுகவிற்கு ஏற்படுத்தியுள்ளது 2026 ஆம் ஆண்டு நிச்சயமா ஆட்சி மாற்றம் ஏற்படும் அது என்னால் முடியும் என விஜய் பேசினார்.
அதன்பிறகு விகடன் மாநாட்டில் நடிகர் விஜய் கூட்டணியை மட்டும் நம்பி இருமாப்போடு 200 தொகுதிகள் வெல்வோம் என்று நினைத்து விட வேண்டாம் அது நிச்சயம் நடக்காது நான் விடமாட்டேன் என தெரிவித்தார்.
தற்போது நேற்று பேசிய பேச்சு அதே வார்த்தையை பயன்படுத்தி உள்ளார் கூட்டணியை மட்டும் நம்பி இருக்கிறீர்கள் நிச்சயம் உங்களை நான் வெல்ல விடமாட்டேன் என பேசி உள்ளார் மேலும் எம்ஜிஆர் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றியும் பேசி உள்ளார் குறிப்பாக 2011 ஆம் ஆண்டு தேர்தல் பற்றிய பேச்சு அதிமுகவுடன் கூட்டணி என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு மிகப்பெரிய கூட்டணி
2011 ஆம் ஆண்டு திமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைந்தது காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இன்னும் சில கட்சிகள் அனைவரும் சேர்ந்து கூட்டணியில் இருந்தார்கள்.
ஆனால் அதிமுக பக்கம் விஜயகாந்த் அதிமுக என மிகப் பெரிய கூட்டணி அமைந்தது இதனால் திமுக 2ம் இடத்திற்கு கூட வர முடியவில்லை இதை நேத்து விஜய் மாநாட்டில் பேசிய பேச்சு என்பது நிச்சயம் திமுகவிற்கு புரிந்து விட்டது.
அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் இந்த முறை நீங்கள் 3ம் இடத்திற்கு சென்று விடுவீர்கள் நிச்சயம் நான் எதிர்க்கட்சி தலைவர் ஆகி விடுவேன் என்பதை தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு நன்றாக தெரியும்
நடிகர் விஜய் கட்சி தொடங்கியவுடன் தமிழ்நாடு முழுவதும் அவருக்கு வாக்கு வங்கி உயர்கிறது போலியான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது அவருக்கு நன்றாக தெரியும் முதல் முயற்சியில் வெற்றி பெற முடியாது என்பதை அவர் நன்றாக உணர்ந்துள்ளார்.
முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் அங்கு ஆளும் கட்சியை கடுமையாக எதிர்க்க வேண்டும் போராட்டங்கள் நடத்த வேண்டும் தமிழ்நாடு முழுவதும் பயணிக்க வேண்டும் மக்கள் பிரச்சனையில் குரல் கொடுக்க வேண்டும் மக்களுடன் போராட்ட களத்தில் இறங்க வேண்டும்.
கடும் கோபத்தில் இருக்கும் திமுக நேரடியாக கடுமையான விமர்சனத்தை..!
அப்படி இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் முதலில் எதிர்க்கட்சியானால் மட்டுமே தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளில் செய்து வெளிவந்து கொண்டே இருக்கும் இளைஞர்களுக்கு விஜய் மீது நம்பிக்கையை ஏற்படும் எதிர்க்கட்சியாவதற்கு தனியாக நின்றால் நிச்சயம் முடியாது.
என்பதை விஜய் உணர்ந்து கொண்டார் நிச்சயம் அதிமுகவுடன் கூட்டணி என்பது உறுதி பாமகவும் சேர்ந்து விடும் இதனால் திமுக 2026 ஆம் ஆண்டு தோல்வி என்பது நாம் உறுதி செய்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |