BJP offers Rs 99 lakh reward if Hindi is proven in Tamil Nadu
தமிழகத்தில் இந்தி திணைப்பை நிரூபித்தால் 99 லட்சம் பரிசு என பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது..!
இந்தி மொழி குறித்து பல்வேறு சர்ச்சைகளும் புகார்களும் இருக்கிறது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு கல்விக்கான நிதியை வழங்க முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
மும்மொழி கொள்கையில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, என இருக்கிறது இதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளவில்லை தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழி மட்டும் போதும் என்று தெரிவிக்கிறது தற்போது இது மிகப்பெரிய பிரச்சனையாக தமிழகத்தில் இருக்கிறது.
கடந்த 1963 ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது அந்தப் போராட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு அந்த போராட்டம் மிகவும் உறுதுணையாக இருந்தது அப்படி இருக்கும் சூழ்நிலையில் மறுபடியும் இந்தி போராட்டம் என திமுக அறிவித்துள்ளது எப்போதெல்லாம் திமுக அரசுக்கு பிரச்சினை வருகிறதோ அப்போதெல்லாம் இந்தி மொழி குறித்து அறிவிப்பை வெளியிட்டு பிரச்சனையை கிளப்பி விடுவார்கள்.
தற்போது மத்திய அரசு தெரிவித்துள்ள முன்மொழிக் கொள்கை என்பது மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் அவர்களுக்கு பிடித்த மொழி என்பதை தெரிவித்துள்ளது இதை திமுக அரசு மையமாக வைத்து தற்போது தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறது.
திமுக அரசின் அலங்கோலங்கால் குறித்து யாரும் பேசி விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற தேவையில்லாத செய்திகளை பரப்பி வருகிறது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக சார்பில் திருப்பூரில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
திமுகவை நிச்சயம் 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்..!
அதில் தமிழகத்தில் இந்தி திணைப்பை உறுதி செய்தால், இந்தி திணிப்பை கண்டுபிடித்தால் 99 லட்சம் பரிசு என ஒட்டப்பட்டுள்ளது முதல் மொழி தமிழ் கட்டாயம்,2வது மொழி ஆங்கில வழி கல்வி, 3வது மொழி மாணவர்களின் விருப்பமான மொழி.
திமுக மந்திரி மகனுக்கு கிடைக்கும் கல்வி ஏழை எளியவர்களின் மகனுக்கு கிடைக்க கூடாதா CBSE பள்ளியில் கிடைக்கும் கல்வி அரசு பள்ளி மாணவனுக்கு கிடைக்கக் கூடாதா என இந்த போஸ்டரில் வசனங்கள் ஒட்டப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |