CBSE exam system Public exams for class 10th held 2 a year
CBSE தேர்வு முறையில் வருகிறது புதிய மாற்றம் 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுதேர்வு பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.
தற்போது மத்திய அரசு கல்விக் கொள்கையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது காலத்திற்கு ஏற்ப கல்வியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது உறுதியாக இருக்கிறது.
உலகில் AI தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது இன்னும் 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மனிதன் குடியேறி விடுவான் அதற்கேற்றது போல் கல்விக் கொள்கையை வகுத்தாக வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் CBSE தற்போது புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது அதன்படி பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு இருமுறை நடக்கும் தேர்வு
10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த CBSE முடிவு செய்துள்ளது,அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வருகிறது இது குறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம்.
CBSE வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிய தேசிய கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது, இதன்படி தேர்வு தொடர்பாக பல்வேறு புதிய பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடரும்.
தற்போது உள்ள தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தனியாக பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது மேலும் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுக்கிறார்கள்.
இதனை சீரமைக்க வேண்டும் தற்போதுள்ள தேர்வு முறையில் குறைபாட்டை மாற்றவும் முழுமையான ஆர்வத்தை ஊக்குவிக்கவும் CBSE வாரியம் தேர்வுகள் புதிதாக அமைக்க உள்ளது.
பல மாதங்கள் பயிற்சி அளித்து மனப்பாடம் செய்வதை விட புரிந்துகொண்டு, கற்பனை திறன்கள், முதன்மையான திறன்கள் மற்றும் சோதிக்கும் வகையில் தேர்வுகள் எளிமையாக்கப்பட வேண்டும் அனைத்து மாணவர்களும்.
எந்த ஒரு கல்வி ஆண்டிலும் இரண்டு முறை பொது தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் ஒருமுறை முதன்மை தேர்வையும் தேவைப்பட்டால்.
மதிப்பெண்களை அதிகரிக்க மற்றொரு முறை இம்ப்ரூவ்மெண்ட் தேர்வையும் (improvement examination) எழுதிக் கொள்ளலாம் என்று இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியிலிருந்து காளியம்மாள் விலகல் ஒவ்வொரு செங்கல்லாய் உருவி எடுக்கும் திமுக..!
இதன்படி 10ம் வகுப்பு ஒவ்வொரு ஆண்டும் முதல் கட்டமாக பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 6ம் தேதி வரையிலும் இரண்டாம் கட்டமாக மே மாதம் 5ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலும் பொது தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர்கள், பெற்றோர்கள், வரும் மார்ச் 9ம் தேதி வரை தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |