Central govt make birth certificate mandatory for obtaining passport
பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிரடி நடவடிக்கை..!
பாஸ்போர்ட் பெறுவது குறித்து முக்கியமான செய்தியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில்.
தற்போது மீண்டும் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ள முக்கியமான சில தகவல்கள் நம் நாட்டில் பிறப்புச் சான்றிதழ் தவிர்க்க முடியாத முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது.
குழந்தைக்கு ஆதார் அட்டை பெற்றால் மட்டுமே பள்ளியில் சேர்க்க முடியும், வங்கி கணக்கு திறக்க முடியும், மற்ற ஆவணங்களை வாங்க முடியும், ஆனால் அந்த ஆதார் அட்டைக்கு கட்டாயம் பிறப்புச் சான்றிதழ் தேவை என்பது உறுதியாகிவிட்டது.
மத்திய மாநில அரசு பணிகளில் சேர்ப்பதற்கும், திருமணத்தை பதிவு செய்வதற்கும்,மாற்றுப் பள்ளியில் சேர்ப்பதற்கும், கல்லூரியில் சேர்ப்பதற்கும், வெளிநாடு செல்வதற்கும், அனைத்திற்கும் கட்டாயம் ஆதார் அட்டை தேவை,இந்த ஆதார் அட்டை குழந்தைக்கு பெறுவதற்கு கட்டாயம் பிறப்பு சான்றிதழ் தேவைப்படுகிறது.
பாஸ்போர்ட் திருத்தங்கள் என்ன..!
பாஸ்போர்ட் பெறுவதற்கு சட்ட விதிகளில் நீண்ட காலமாகவே பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் இருந்தது கிராமங்கள் மற்றும் ஊராகப் பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களிடம் பிறப்புச் சான்றிதழ் இருக்காது என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பாஸ்போர்ட் சட்டம் 1980 விதிகளில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது அந்த அறிக்கையில்.
நள்ளிரவு வரை சீமானியிடம் நடந்த விசாரணை காவல் நிலையத்தில் என்ன நடந்தது..!
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு கட்டாயம் பிறப்புச் சான்றிதழ் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது நகராட்சி, மாநகராட்சி, போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு இறப்பு சான்றிதழ் மட்டுமே.
பிறப்பு சான்றிதழ் ஆவணமாக இனிவரும் காலங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்,அரசிதழ் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 2023 அக்டோபர் 1க்கு முன்பு பிறந்தவர்களுக்கு இந்த பிறப்புச் சான்றிதழ் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |