சென்னையில் இரவு முழுவதும் மது குடித்த கல்லூரி மாணவி பலி உச்சகட்ட அதிர்ச்சியில்..!College student dies after drinking all night in Chennai

College student dies after drinking all night in Chennai

சென்னையில் இரவு முழுவதும் மது குடித்த கல்லூரி மாணவி பலி உச்சகட்ட அதிர்ச்சியில்..!

சென்னையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவி சக நண்பர்களுடன் இரவு முழுவதும் மது அருந்தியதால் திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி படிக்கும் வயதில் அதுவும் பெண்கள் இதுபோல் நடந்து கொள்வது என்பது தமிழகத்தின் நிலைமை பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது மதுவால் தினந்தோறும் பல உயிர்கள் மடிகிறது.

பல்வேறு பொருட்செலவுகள் அரசுக்கு ஏற்படுகிறது போதை பொருட்களை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுக்கப்பட்டு வருகிறது தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது பெண் இவர் கேளம்பாக்கத்தை அடுத்த தனியார் கல்லூரியில் BCA படித்து வந்துள்ளார்.

இவர் ஏகாட்டுரில் தனியார் விடுதியில் தங்கியிருந்தார் இந்த நிலையில் கல்லூரிக்குத் திரும்பிய அனிதா தனது தோழியின் அறையில் இரவு தங்கியிருந்ததாக தெரிகிறது அப்பொழுது சக மாணவிகளுடன் சேர்ந்த இரவு முழுவதும் மது குடித்துள்ளார்.

இதில் அனிதாவுக்கு திடீரென்று வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது இதனால் பதறிய சக மாணவிகள் அனிதாவை மீட்டு உடனடியாக கேளம்பாக்கத்தில் உள்ள மிகப்பெரிய செட்டிநாடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார்கள்.

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அந்த பெண் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்கள் சக மாணவிகளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.

விரைந்து வந்த காவல்துறை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி அனுப்பி வைத்துள்ளார்கள் இது பற்றி சக மாணவிகளிடம் காவல்துறை தீவிரமான விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

அதிமுகவுடன் நடிகர் விஜய் கூட்டணி வைத்து 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெற்றால்..!

கல்லூரிக்கு அனுப்பிய பெற்றோர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது ஏனென்றால் ஒரு பெண் 19 வயதில் மது அருந்துவது என்பது மிகவும் அதிர்ச்சிகரமான செய்தி இதனால் அந்த பெண்ணின் வாழ்க்கை தற்போது முடிந்துள்ளது.

இது தமிழகத்தில் பெண்கள் நிலைமை எப்படி இருக்கிறது என்பதை தெளிவாக புரிகிறது, போதைப்பொருள் அல்லது மது எப்படி பெண்கள் கையில் கிடைக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment