DMK allies have started criticizing Vijay harshly
விஜய் ஒரு பாதரசம் திமுகவின் கூட்டணி கட்சிகளில் இருந்து வெளிவரும் கடுமையான எதிர்வினை..!
விஜய் எப்படியாவது தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என திமுக கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது மாநாட்டில் பேசிய பேச்சு என்பது மீண்டும் திமுகவை கடுமையாக அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடிகர் விஜய் திமுகவையும் பாஜகவையும் ஒற்றுமையாக சேர்த்து பேசினார் இவர்கள் இரண்டு பேரும் கூட்டணியில் இருக்கிறார்கள் ஆனால் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் பாயாசம் என்று பேசினார் மீண்டும் அதே வசனத்தை 2வது ஆண்டு தொடக்க விழாவில் பேசியுள்ளார் பாசிசத்திற்கும் பாயாசத்திற்கும் என்ன வித்தியாசம் என்று விஜய் பேசியுள்ள பேச்சு திமுகவை உச்சகட்ட கோவத்திற்கு அழைத்து சென்றுள்ளது.
திமுக இங்கு பாஜகவை காண்பித்து தான் தற்போது அரசியல் செய்து வருகிறது எதிர்க்கட்சிகளை மதிப்பதில்லை யார் என்ன செய்தாலும் மதிப்பதில்லை ஆனால் விஜய் கட்சி தொடங்கியது முதல் விஜயினுடைய ஒவ்வொரு செயல்பாட்டுக்கும்.
திமுக பதிலடி கொடுத்து வருகிறது விஜய் பேசிவிட்டு சென்றுவிட்டார் உடனடியாக திருமாவளவன் தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்தார்.
ஏன் திமுக இப்பொழுது தன்னுடைய கூட்டணி கட்சிகளை தூண்டி விடுகிறது
இன்னும் தேர்தலுக்கு சரியாக ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது விஜய் இன்னும் முழுமையாக அரசியலில் நுழையவில்லை அவருடைய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அவருடைய படம் 2026 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
அப்பொழுது சிவகார்த்திகேயனுடைய பராசக்தி படமும் ரிலீஸ் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது இதற்கிடையில் விஜய் தன்னுடைய கட்சியை கட்டமைக்கும் பணிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இப்பொழுது தான் திமுகவின் ஒவ்வொரு கூட்டணிகட்சிகளும் விஜய்க்கு பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளார்கள் நடிகர் கருணாஸ் பாசிசத்திற்கும் பாயாசத்திற்கு வித்தியாசம் தெரியாத பாதரசம் விஜய் என்று கடிமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இதே நடிகர் கருணாஸ் 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டசபைக்குள் நுழைந்தார் அப்பொழுது அவர் தெரிவித்த கருத்து என்னவென்றால்.
நான் என்னுடைய சொந்த மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்தபோது இதே எம்எல்ஏ குடியிருப்பு பகுதியில் இரவில் சாப்பாட்டுக்கு வழி இன்றி தங்கி உள்ளேன் ஆனால் இன்று அதே மாளிகையில்.
என்னை குடியமர்த்திய அம்மாவுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையை தெரிவித்தார் அம்மா மறைவுக்கு பிறகு இவர்களுடைய முகம் வெளிச்சத்திற்கு தெரிய வந்துள்ளது சிறிதும் நன்றியுணர்ச்சி இல்லாத ஆள் இதுபோன்ற நபர்கள்.
தற்போது விஜய் கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார்கள் விஜயின் அரசியல் எதிர்காலம் என்பது அவர் 2026 ஆம் ஆண்டு வெற்றி பெற்றால் மட்டுமே இல்லை என்றால் அவருடைய அரசியல் எதிர்காலம் இல்லை.
சினிமாவின் எதிர்காலமும் இல்லை ஏனென்றால் விஜய் உடன் இருக்கும் நபர்கள் நேரடியாக திமுகவின் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள் அதிமுக திமுகவை அரசியல் ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்யும்.
ஆட்சியில் இருக்கும் குறைகளை மட்டுமே விமர்சனம் செய்யும் இதை திமுக கண்டு கொள்ளாது ஏனென்றால் எதிர்க்கட்சியை அல்லது எந்த கட்சியாக இருந்தாலும் ஆட்சியை விமர்சனம் செய்வது இயல்பு என்று கடந்து செல்லும்.
ஆனால் விஜய் உடன் இருக்கும் சில மனிதர்கள் முக்கியமான அதாவது வாரிசு அரசியலை விமர்சனம் செய்கிறார்கள் இது திமுகவிற்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
நிச்சயம் திமுக இதற்கு எத்தனை கோடி செலவு செய்தாலும் விஜய் தோற்கடிக்க வேண்டும் என தற்போது தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.
நடிகர் விஜய் திருமாவளவன் தன்னுடன் கூட்டணி வைப்பார் என்று இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறார் அது நடக்காது ஏனென்றால் விஜய் ஒவ்வொரு முறையும் திமுகவை விமர்சனம் செய்யும் போது முதல் நபராக விஜய்க்கு பதிலடி கொடுப்பது திருமாவளவன்.
இதை சரியாக பயன்படுத்துவது திமுக தொடர்ந்து திருமாவளவனம் விஜயும் மாறி மாறி விமர்சனத்தை முன்வைத்து தேர்தல் நேரத்தில் கூட்டணி வைத்தால் வாக்குகள் செல்லாது.
இது திமுகவிற்கு நன்றாக தெரியும் இப்படி இருக்கும் சூழ்நிலையில் தான் தன்னுடைய அனைத்து கூட்டணி கட்சிகளையும் திமுக பயன்படுத்துகிறது நடிகர் விஜய்யின் பேச்சுக்கு.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |