DMK is struggling to decide on an alliance for the 2026 assembly elections
என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கும் திமுக பிடி கொடுக்காமல் இருக்கும் எடப்பாடி என்ன நடக்கிறது..!
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது தற்போது திமுக பக்கம் ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகள் இருக்கிறார்கள் அவர்கள் கூட்டணியை விட்டு வெளியில் செல்ல மாட்டோம் என தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் தொகுதி பங்கீடு, தொகுதிகளின் எண்ணிக்கை, எங்களுக்கு அதிகமாக ஒதுக்க வேண்டும் இந்த முறை நிச்சயம் கடந்த முறை கொடுத்த தொகுதியை நாங்கள் பெற்றுக் கொள்ள மாட்டோம் தொகுதிகளின் எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்க வேண்டும் என வெளிப்படையாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து விட்டார்கள்.
நாங்கள் கேட்கும் தொகுதி கண்டிப்பாக கொடுக்க வேண்டும் இல்லை எனில் கூட்டணியில் கையொப்பமிட மாட்டோம் என தெரிவித்து விட்டார்கள் ஆனால் திமுக நாங்கள் 200 தொகுதிகளில் நிச்சயம் தனித்து களம் இறங்குவோம் மற்ற 34 தொகுதிகள் மட்டுமே கூட்டணிகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் எதிரணியில் இருக்கும் அதிமுக யாருடன் கூட்டணி வைக்கிறது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கும் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை நாம் தமிழர் கட்சியை திமுக உடைத்துக் கொண்டு இருக்கிறது.
பாமக பாஜகவை விட்டு எப்பொழுது வெளியேறுவோம் என காத்திருக்கிறது இப்படி சூழ்நிலைகள் மாறி இருக்கும் நிலைமையால் யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அதிமுக எங்களுக்கு திமுகவை தவிர அனைவரும் நண்பர்கள் திமுக மட்டுமே எதிரி என தெரிவித்துள்ளது திமுக இந்த முறை சில கட்சிகளை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது என்பது தெரிந்து விட்டது.
முக்கியமாக விடுதலை சிறுத்தை கட்சிகள் எங்களுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் இல்லையெனில் கூட்டணியில் கையொப்பமிட மாட்டோம் அதுவும் நாங்கள் கேட்கும் தொகுதிகளில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் நிச்சயம் இந்த முறை எங்களுக்கு 40 தொகுதிகளுக்கு மேலும் ஒருகீடு செய்ய வேண்டும் என இருக்கிறது மற்ற இடதுசாரி கட்சிகளும் அதே நிலைமையில் இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் சூழ்நிலையில் திமுக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறது ஒருவேளை அதிமுக, தமிழக வெற்றி கழகம், பாமக, தேமுதிக மற்றும் இன்னும் சில கட்சிகள் ஒன்றிணைந்து விட்டால் வெற்றி என்பது அவர்களுடையது.
அதிமுக இதுவரை யாருடன் கூட்டணி என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை விஜயம் கூட்டணி குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை அமைதியாக கட்சி வேலையை பார்க்கிறார் பாமகவும் இப்பொழுது பாஜகவுடன் நெருக்கமாக இல்லை அவ்வப்போது பாஜகவை எதிர்த்து பேசி வருகிறது.
சூழ்நிலைகள் இப்படி இருப்பதால் எப்படி விமர்சனம் செய்வது என்று தெரியாமல் திமுக இருக்கிறது கூட்டணி உறுதியானால் அதற்கேற்றார் போல் விமர்சனத்தை முன் வைக்கலாம் என்பது திமுகவின் அரசியல் வியூகம்.
ஆனால் எதிரணியில் கூட்டணி நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை தன்னுடைய கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நிலைப்பாடும் என்னவென்று தெரியவில்லை 5 வருட திமுகவின் எதிர்ப்பு மனநிலை நிச்சயம் திமுகவிற்கு எதிராக அமையும்.
தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, போதைப்பொருள் நடமாட்டம், அரசு ஊழியர்களின் போராட்டம், ஊழல் என பல்வேறு பிரச்சனைகளை திமுக சந்தித்து வருகிறது.
கூட்டணி வைக்க வேண்டும் என்றால்..!
கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிக தொகுதிகள் கேட்கிறார்கள் இல்லையெனில் கூட்டணியை விட்டு வெளியேறி விடுவோம் என மறைமுகமாக தெரிவிக்கிறார்கள் அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் திமுகவிற்கு நிச்சயம் 50 தொகுதிகள் குறையும்.
இப்படி 50 தொகுதிகள் குறைந்தால் அதை அதிமுக சும்மா விடாது அந்த 50 தொகுதிகளில் வலுவாக வெற்றி பெறுவதற்கு தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தும் அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே தன்னுடைய கூட்டணியில் 30 தொகுதிகளை மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்தால் அது மிகப்பெரிய ஆபத்தாக இந்த தேர்தலில் மாறிவிடும்.
ஏனென்றால் அதிமுக வலுவாக தேர்தல் பணிகளை செய்துவிடும் கூட்டணி கட்சிகளால் செய்ய முடியாது இது இரண்டு கட்சிகளுக்குமே நன்மை மற்றும் தீமையை ஏற்படுத்துகிறது வெற்றிகளில் இந்த கூட்டணி கட்சிகள் பங்கு முக்கியமாக இருக்கிறது அதேபோன்று தோல்விகளிலும் இவர்களின் பங்கு முக்கியமாக இருக்கிறது.
அதனால் கூட்டணி கட்சிகளுக்கு அதிகமான தொகுதியை ஒதுக்கீடு செய்ய முடியாமலும் அவர்களை கூட்டணியை விட்டு வெளியேற்ற முடியாமலும் அவர்களை சமாதானப்படுத்த முடியாமலும் திமுக தற்போது திணறி வருகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |