Edappadi Palaniswami and the TN CM are now in a heated argument
எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழக முதல்வருக்கும் இப்போது கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது..!
துண்டு சீட்டு உடன் கூட வாருங்கள் நேருக்கு நேர் விவாதிக்கலாம் என ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார் திமுக அரசு இப்பொழுது தமிழகத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது இதனை எப்படியாவது சமாளிக்க வேண்டும்.
மக்களிடத்தில் நல்ல பெயர் பெறவேண்டும் என தற்போது மொழி பிரச்சனையை கையில் வைத்துள்ளது திமுக அரசு ஒவ்வொரு நாளும் மொழி பிரச்சனையை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கு தேவையானதை செய்து வருகிறது.
மத்திய அரசை கண்டித்து திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டின் உரிமைகளை முந்தைய ஆட்சியாளர்கள் டெல்லியில் அடகு வைத்தார்கள் என விமர்சித்தார்.
இந்த நிலையில் டெல்லியில் தமிழ்நாட்டின் உரிமைகளை யார் அடகு வைத்தது என கேள்வி எழுப்பியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்..!
கல்லக்குடியில் ரயில் வராத தண்டவளமாக பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு இன்று வரை உங்களுடைய துரோகங்களை மக்கள் பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.
திமுக கட்சி எதற்காக தோற்றுவிக்கப்பட்டது அதன் அடிப்படை நோக்கங்களை முழுவதும் மறந்து விட்டு இந்தி திணிப்பை முதன் முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து இன்றைக்கு கொல்லைப்புறமாக.
PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவுக்கு அதிமுக பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கையொப்பமிட்டு டெல்டா விவசாயிகளின் உரிமைகளை அடகு வைத்தவர் நீங்கள் தானே.
நாட்டில் முதன் முதலில் நீட் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியது திமுக காங்கிரஸ் கூட்டணி அந்த கூட்டணியை சேர்ந்தவர்களை வைத்து உச்சநீதிமன்றத்தை வரை சென்று நீங்கள் நீட்டை கொண்டு வர வாதாடி மாணவர்களின் மருத்துவக் கனவை அடகு வைத்தவர்கள்.
மதுரை அரிபட்டினம் டங்ஸ்டன் ஏல முடிவுகள் வரும் வரை கள்ள மவுனம் சாதித்து பல்வேறு சதி செயல்களால் மதுரை மக்களின் வாழ்க்கையை அடகு வைத்தவர்கள்.
கடந்த 2011 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் அண்ணா அறிவாலயத்தில் 3வது மாடியில் சிபிஐ சோதனை நடக்க முதல் மாடியில் மூன்று மடங்கு சீட்களை கொடுத்து காலில் விழுந்து கெஞ்சி கொத்தடிமைகள் நீங்கள் தானே.
ஆனால் பாஜகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தபோதும் 7.5 இட உள் ஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தோம் மாணவர்களுக்காக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி மேலாண்மை ஆணையம் என பல்வேறு முக்கிய திட்டங்களை தமிழ்நாட்டில் கொண்டு வந்தோம்.
மத்திய அரசின் அனைத்து ஆய்வு அறிக்கைகளிலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு முன்னிலையில் வகிக்க ஒரே காரணம் 10 ஆண்டு அதிமுக நடத்திய சிறப்பான ஆட்சி நாங்கள் மக்களுக்கு சரியான ஆட்சி நடத்தினோம்.
பாலியல் புகாரில் சிக்கிய 25 அரசு ஆசிரியர்கள் டிஸ்மிஸ் என்ன நடந்தது..!
நேர்மையான ஆட்சி நடத்தினோம் வெறும் விளம்பரங்களை வைத்து மட்டும் ஆட்சி நடத்தவில்லை அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களே நீங்கள் வீர வசனம் பேசுகிறீர்கள் எதிர்கட்சி தலைவர் என்ற.
அடிப்படையில் கேட்கிறேன் உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா அந்த தெம்பு திராணி உங்களுக்கு இருக்கிறதா எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள் பார்க்கலாம் என காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |