Edappadi Palaniswami important statement on the alliance
கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை குழப்பமான மன நிலையில் மற்ற கட்சிகள்..!
எடப்பாடி பழனிசாமி தற்போது தமிழக முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் தீவிரமான கட்சியை வலுப்படுத்த வேண்டும் தேர்தலுக்கு இன்னும் சரியாக 13 மாதங்கள் மட்டுமே இருக்கிறது என்பதால் சூறாவளி பிரச்சாரத்தில் தற்போது இறங்கியுள்ளார்.
அதிமுக சார்பில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசை மிக கடுமையாக விமர்சித்து பேசி உள்ளார் குறிப்பாக பாஜகவுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சுவதாக குறிப்பிட்டார்.
தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சாடினார் தற்போது அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் தமிழக முழுவதும் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் செயற்குழு கூட்டம் கூட்டி பிறந்த நாள் விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது, இந்தக் கூட்டத்தில் தேனியில் இன்று எடப்பாடி பழனிசாமி பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தையும் பற்றியும் தெரிவித்தார் தற்போது அந்த கருத்து வைரலாக சமூக வலைத்தளங்களில் வெளிவருகிறது இப்போது தமிழ்நாட்டில் இருப்பது திராவிட மாடல் அரசு இல்லை.
ஸ்டாலின் மாடல் அரசு தான் இங்கே மாநிலத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது, மிக எளிமையாக கஞ்சா தமிழகம் முழுவதும் கிடைக்கிறது, இதனால் இளைஞர்கள் அடிமையாகி விட்டார்கள்.
மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், என்பது உச்ச கட்டத்தில் இருக்கிறது, தமிழகத்தில் முக்கியமாக தமிழக பள்ளிகளில் இருக்கும் சிறுமிகள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
இங்கு யாருக்குமே பாதுகாப்பு இல்லை பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் தற்போது அஞ்சுகிறார்கள் என தெரிவித்தார், காவல் உயர் அதிகாரிகளாக இருக்கும் பெண் அதிகாரிகளுக்கு கூட இங்கு பாதுகாப்பு இல்லை.
ஒரு பொம்மை முதல்வர் ஆட்சி எப்படி இருக்கும் என்பது ஸ்டாலின் ஆட்சி என தெரிவித்தார், திமுக மாவட்ட செயலாளர் அனைத்து அரசு அதிகாரிகளையும் மிரட்டுகிறார் ஆனால் இவை அனைத்துமே மிக விரைவில் முடிவுக்கு வரும் தெரிவித்தார்.
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை வர உள்ளது அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை பார்த்துக் கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி கூட கொடுக்க முடியாத நிலையில் தமிழக அரசு இருக்கிறது, 42 கோடி செலவு செய்து கார் பந்தயம் தேவையா எனும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி நினைவாக எழுதாத பேனாவுக்கு 80 கோடி ரூபாய் செலவிடப் போகிறார்கள், கடந்த 73 ஆண்டுகளில் தமிழக அரசின் மொத்த கடன் 5,18,000/- கோடி ரூபாயாக மட்டுமே இருந்தது ஆனால் இவர்கள் 4 ஆண்டு ஆட்சிக்காலத்தில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது 10 ஆண்டுகள் மத்தியில் இவர்கள் சொகுசாக பதவி வகித்தார்கள் இவர்கள்தான் நீட் தேர்வை கொண்டு வந்தார்கள் என்றும் அதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அதிமுக கொண்டு வந்தது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிகமான மருத்துவ கல்லூரிகளை கட்டியது அதிமுக எனவும் தெரிவித்தார் அதிமுக எப்பொழுதும் இரு மொழி கொள்கையில் உறுதியுடன் இருக்கிறது எனவும் தெரிவித்தார் எங்களுக்கு திமுக தான் எதிரி.
மத்திய அரசு செயல்படுத்தும் சிறந்த நலத்திட்டங்கள் பட்டியல்கள்..!
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மட்டுமே எங்கள் இலக்கு எங்களுக்கு வேறு எந்த கட்சியும் எதிரி இல்லை என்று பேசினார் அதாவது திமுகவை அகற்றுவதற்கு தங்கள் இலக்கு என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
எந்த ஒரு கட்சியும் தங்களுக்கு எதிரி இல்லை என்று அவர் கூறியுள்ள நிலையில் விஜய் மற்றும் இன்னும் சில கட்சிகளுக்கு கூட்டணி கதவு திறந்து வைத்திருப்பது உறுதி ஆகிவிட்டது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |