Golden opportunities this year for youth preparing for TNPSC Exams
TNPSC தேர்வு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த ஆண்டு இருக்கக்கூடிய பொன்னான வாய்ப்புகள் தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது. .
தமிழக அரசின் கீழ் சுதந்திரமாக செயல்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை கணக்கிட்டு அதற்கேற்றார் போல் தேர்வுகளை நடத்தி பணியாளர்களை நியமிக்கிறது.
தற்போது இந்த ஆண்டு இந்த தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு முக்கிய ஆண்டாக இருக்கப் போகிறது ஏனென்றால் திமுக அரசு ஆட்சிக்கு வந்து முதல் இரண்டு வருடங்கள் அரசு தேர்வு சரியாக நடைபெறவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டினார்கள்.
தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கும் ஒரு வருடம் ஆகிறது இது பற்றி இணையதளத்தில் பல்வேறு விதமான புகார்களும் செய்திகளும் பரப்பப்பட்டது ஒரு கட்டத்தில் அரசு பணிந்து விட்டது ஏனென்றால் இளைய சமுதாயம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே நாளில்.
இணையதளத்தில் எப்பொழுது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கடந்த 2023 ஆம் ஆண்டு கேள்விகளை கேட்க தொடங்கி விட்டார்கள் காலையில் கேள்விகள் கேட்க தொடங்கியதும் மாலையில் தமிழக அரசு ஓடோடி வந்து விரைவில் வெளியிட்டு விடுவோம் என தேதிகளை அறிவித்து விட்டது.
அப்பொழுது இருந்து தமிழக அரசுக்கும் சரி தேர்வு எழுத மாணவர்களுக்கும் சரி சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் சூழ்நிலை உருவாகிவிட்டது தேர்வு நடைபெறவில்லை என்றால் அனைவரும் ஒன்று சேர்ந்து.
சமூக வலைத்தளங்களில் அரசிடம் கேள்வி கேட்க தொடங்கிவிட்டால் இரண்டு மணி நேரம் அல்லது மூன்று மணி நேரத்தில் அரசு பதில் அளித்து விடுகிறது இளைய சமுதாயத்தை தமிழக அரசு பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
தற்போது இந்த ஆண்டு முக்கிய வாய்ப்பு
இந்த தேர்வு தயாராகும் இளைஞர்களுக்கு இந்த ஆண்டு முக்கிய வாய்ப்பாக கருதப்படுகிறது ஏனென்றால் அடுத்த வருடம் நிச்சயமாக தேர்தல் நடைபெறுவதால் தேர்வு மற்றும் பணி வாய்ப்புகள் கால தாமதம் ஏற்படும்.
திமுக அரசு இளைய சமுதாயத்திடம் நற்பெயர் பெறுவதற்கு முடிந்தவரை இந்த வருடமே தேர்வுகளை நடத்திவிடும் அதற்கான தேர்வு முடிவுகளும் வெளியிட்டப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது காலிப் பணியிடங்களில் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என தகவல்கள் கசிந்துள்ளது.
நிலத்தை விற்பனை செய்வது அல்லது வாங்குவது தொடர்பாக அடிப்படை..!
இன்னும் சில மாதங்களில் தொடர்ந்து தேர்வுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது தேர்வு நடைபெற்றாலும் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து முடிவுகளும் வெளியிட்ட படும்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் வேலைக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என அந்த கட்சி சார்ந்த தலைவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |