Hatsun Arokya Milk price to increase by Rs 4 from tomorrow
பட்ஜெட் பற்றிய போலியான பிம்பம் உருவாக்கப்படுகிறது அதே நேரத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை 82 ரூபாய் இதற்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லும்.
தற்போது தனியார் பால் நிறுவனங்கள் விலையை மீண்டும் உயர்த்தி உள்ளது ஒரு லிட்டர் மீது 4 ரூபாய் தயிர் மீது 3 ரூபாய் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் பால் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு என்று அப்போது 2 ரூபாய் உயர்த்தப்பட்டது தற்போது மீண்டும் பால் விலை உயர்த்தப்படுகிறது இதற்கெல்லாம் தமிழக அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காது.
வெற்றான ஒரு பட்ஜெட்டுக்கு மிகப்பெரிய ஒரு போலியான பிம்பத்தை கட்டமைப்பார்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநில அரசும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது மத்திய அரசும் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருக்கும் போது கூட சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது இதுபோன்ற ஒரு போலியான பிம்பத்தை யாரும் உருவாக்கவில்லை திமுக வாயை திறந்தாலே பொய்தான்.
இவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் மிகப்பெரியதாக செய்கிறோம் என்று சமூக வலைத்தளங்களில் செய்திகளை பரப்புவார்கள் ஆனால் அந்த 3 நாள் மட்டுமே அந்த செய்திகள் பேசப்படும் உடனடியாக மற்றொரு செயலில் கவனத்தை திருப்பி விடுவார்கள்.
தற்போது பாலியல் குற்றங்கள், சாதிய வன்முறைகள், போதைப்பொருட்கள், விஜய் போன்ற பல்வேறு பிரச்சனைகள் திமுகவிற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது இதனை திசை திருப்புவதற்கு பட்ஜெட் என்ற பெயரை கையில் எடுத்துள்ளார்கள்.
தமிழகம் இந்த பட்ஜெட்டால் உடனடியாக முன்னேறிய மாநிலமாக மாறும் என்றால் நிச்சயம் இல்லை, தமிழகத்தின் கடன் தீர்க்கப்படுமா என்றால் இல்லை, விலைவாசி உயர்வு கட்டுப்படுமா என்றால் நிச்சயம் இல்லை.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் ஏன் இது போன்ற ஒரு போலியான பிம்பத்தை கட்டமைக்கிறார்கள் மக்கள் பணத்தில், அரசு பஸ்களின் நிலைமை அனைவரும் அறிந்தது, அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது.
காய்கறிகளின் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பது அனைவரும் அறிந்தது 523 வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளார்கள் என்பதை யாருக்கும் தெரியாது ஆனால் 90 சதவீதம் நிறைவேற்றி விட்டோம்.
95% நிறைவேற்றி விட்டோம், 80 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி சொல்வார் அடுத்த முறை திமுக ஆட்சி செய்தால் நிச்சயம் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
2006 முதல் 2011 வரை திமுக செய்த ஊழலால் பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாமல் சென்றார்கள் இந்த முறை திமுக தோல்வி தழுவினால் நிச்சயம் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்பது உறுதியாகிவிட்டது அதற்குதான் தற்போது இதுபோன்ற ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு செயல்படும் Hatsun நிறுவனத்தின் ஆரோக்கிய பால் விலை நாளை முதல் மீண்டும் உயர்கிறது இது இந்த நிறுவனத்தின் தன்னிச்சையான முடிவு இதற்கு தமிழக பால் முகவர்கள் தொழிலாளர் நலச்சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
பட்ஜெட் குறித்து சமூக வலைதளங்களில் திமுக பரப்பும் போலி செய்திகள்..!
தற்போது ஒரு லிட்டர் 82 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது கண்டிப்பாக நடுத்தர குடும்பங்களுக்கு இது மிகப்பெரிய சுமையாக இருக்கும் சென்னை போன்ற மிகப்பெரிய மாநகரத்தில் வாழும் மாத ஊழியர்களுக்கு.
நிச்சயம் இது பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அரசு உடனடியாக தலையிட்டு இதனை நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |