தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் எப்படி இருக்கிறது? மக்களின் கருத்து என்ன..!How is the agriculture budget presented in Tamil Nadu today

How is the agriculture budget presented in Tamil Nadu today

தமிழகத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட் எப்படி இருக்கிறது? மக்களின் கருத்து என்ன..!

2025-2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டது திமுக அரசின் முழு பட்ஜெட் இதுவே திமுக அரசின் இறுதி பட்ஜெட்  அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

திமுக அரசுக்கு இருக்கும் அதிகாரம் சற்று குறையும் தேர்தல் நெருங்கி வருவதால் மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியிட முடியாது அறிவிப்புகள் வெளியிட்டாலும் அதனை செயல்படுத்த முடியாது என்பது அனைவரும் அறிந்தது.

ஆனால் திமுக அரசு இப்பொழுது வெளியிட்டு இருக்கக்கூடிய பட்ஜெட் என்பது 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதி போலவே இருக்கிறது 523 வாக்குறுதிகளை வெளியிட்டது ஆனால் அதில் ஒன்று அல்லது இரண்டை நிறைவேற்றிவிட்டு.

95 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் 85 சதவீதம் நிறைவேற்றி விட்டோம் 90% நிறைவேற்ற விட்டோம் என்று தமிழக முதல்வர் பொய் சொல்கிறார் அதே போன்று தான் தற்போது இந்த ஆண்டு திமுக அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டும்.

வேளாண் பட்ஜெட் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை ஏனென்றால் 2021 ஆம் ஆண்டு மக்களுக்கான பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார் ஆனால் அவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

தற்போது பட்ஜெட் குறித்து பல்வேறு கருத்துக்கள் தமிழகத்தில் உலா வருகிறது அந்த கருத்துக்கள் குறித்து மக்களிடம் விசாரித்த போது மக்கள் அவ்வளவு ஆர்வமாக பட்ஜெட் மீது நம்பிக்கை இல்லை ஏதாவது பேசி விட்டு செல்லுங்கள் வேறு வழியில்லை என்ற சூழ்நிலையில் மக்கள் இருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் குடிமரத்து பணிகள் செய்யப்பட்டது அதனால் நிலத்தடி நீர் உயர்ந்தது மக்கள் செழிப்புடன் இருந்தார்கள் அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பாக கோவை அவிநாசியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஏரி, குளம், குட்டை, நீர் நிலைகள் தூர்வாரப்பட்டது இதனால் மக்கள் பயன் அடைந்தார்கள் ஆனால் இந்த ஆண்டு அறிவித்துள்ள பட்ஜெட் என்பது மக்களை ஏமாற்றும் வகையில் இருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளது..!

நமது வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில் வேளாண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவி தொகை அதிகரிப்பு முதல்வரின் 1000 உழவர் நலச் சேவை மையங்கள் புதிய தொழில்நுட்பங்கள்.

திமுகவின் தோல்வியில் முடிந்த பட்ஜெட் விளம்பரம் வழக்கம் போல் மக்கள் கண்டு கொள்ளவில்லை..!

சிறு குறு விவசாயிகளின் நலன் மலை வாழ் உழவர் முன்னேற்ற திட்டம் டெல்டா அல்லாத மாவட்ட நெல் விவசாயிகளுக்கு சிறப்பு தொகுப்பு திட்டம் வேளாண் பொருட்கள் மதிப்பு கூட்டும் அலகுகள் அமைக்க நிதி உதவி,என பல்வேறு முத்தான திட்டங்களுக்கு 45661 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment