How to keep your home cool this summer without AC or Air Conditioning
AC, Air Conditioning இல்லாமல் இந்த கோடைகாலத்தில் உங்களுடைய வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது எப்படி..!
தற்போது கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் பல மடங்கு அதிகரித்துள்ளது கிராமப்புறங்களில் கூட வெயிலில் தாக்கம் இந்த ஆண்டு அதிகமாக இருக்கிறது.
இந்த ஆண்டு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பாக பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுவெளியில் வருவதற்கு மக்கள் அச்சப்படுகிறார்கள்.
வீட்டிற்குள் இருந்தாலும் வெப்பமாக இருக்கிறது, உங்கள் வீட்டில் ஏசி மற்றும் ஏர் கண்டிஷன் இல்லாமல் இருந்தால் உங்கள் வீட்டை எப்படி குளுமையாக வைப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்கலாம்.
நீங்கள் கிராமப்புறமாக இருந்தால் மிக எளிமை உங்களுடைய வீட்டை சுற்றி மரம் வளர்த்தால் போதும் எப்பொழுதுமே குளிர்ச்சியாக இருக்கும் வீட்டுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
வீட்டின் ஜன்னலில் இதை செய்யுங்கள்..!
உங்கள் வீட்டில் ஜன்னலை காலை முதல் மாலை வரை திறந்து வைத்திருங்கள் குறிப்பாக ஜன்னல்கள் எதிரெதிராக இருக்க வேண்டும் காற்று உள்ளே நுழைந்தால் மறுபுறம் எளிமையாக வெளியே செல்ல வேண்டும்.
ஜன்னலில் சிறிய தாவரங்கள் வளர்க்கலாம், கொடி தாவரங்கள் வளர்க்கலாம், இதன் மூலம் வீடு வெப்பமாவுதல் குறைக்கப்படும் மேலும் மூங்கில் மரத்திற்கு வெப்பத்தை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது எனவே மூங்கில் திரை உங்கள் ஜன்னலில் தொங்கவிடலாம்.
நீங்கள் நகர்புறங்களில் வசித்தால் உங்கள் வீட்டை சுற்றி வீடுகள் இருக்கும் நிச்சயம் காற்றோட்டம் இருக்காது இது போன்ற சூழ்நிலைகளில் உங்களுக்கு கை கொடுப்பது கொடி தாவரங்கள் மட்டுமே.
உங்கள் ஜன்னலில் கொடி தாவரங்கள் வளருங்கள் நிச்சயம் இது உங்கள் வீட்டில் வெப்பநிலை குறைக்கும் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளில் வீட்டின் தரையை சுத்தம் செய்து விடுங்கள் கோடை காலத்தில் வீட்டின் மொட்டை மாடியில் வெள்ளை நிற வண்ணப்பூச்சு செய்து விடுங்கள்.
வெள்ளை நிறம் ஒளியை எதிரொலிக்கும் தன்மை இருக்கிறது குறிப்பாக வெப்பத்தை அதிகமாக கடத்தாது வீட்டை சுற்றி எப்பொழுதும் வேப்பமரம், புங்கமரம், மாமரம், வாழைமரம், போன்றவை இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் என்னதான் ஏசி, ஏர் கண்டிஷன், ஃபேன் போன்றவை பயன்படுத்தினாலும் மரங்கள் மட்டுமே காற்றை சுத்தமாகவும் குளிர்ச்சியாகவும் உங்களுக்கு கொடுக்கும் எந்த செலவும் இல்லாமல்.
இரவு நேரங்களில் வீட்டின் மொட்டை மாடியில் தண்ணீர் தெளிக்க வேண்டும் குறிப்பாக இரவு 10 மணிக்கு பிறகு வீட்டில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தக்கூடிய சமையல்களை செய்ய வேண்டாம் குறிப்பாக புகை வீட்டில் இருக்கக் கூடாது.
நகர்ப்புறங்களாக இருந்தால் உங்கள் வீட்டை சுற்றி அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் இதனால் காற்று எளிமையாக கடந்து செல்லாது வாகனங்கள் இருப்பதால் வெப்பம் அதிகரிக்கும் இதனை குறைப்பதற்கு வீடு கட்டும் பொழுது அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.
TNPSC Group தேர்வுக்கான இந்தியாவில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் பட்டியல்கள்..!
குறிப்பாக மரம் நடுவதற்கு இடங்களை தயார் செய்து கொள்ளுங்கள், உங்களுடைய பகுதிக்குள் மரம், செடிகள், கொடிகள், மட்டுமே உங்கள் வீட்டை சுற்றி இருக்கின்ற வெப்பத்தை குறைக்க வழி வகுத்தும் உங்கள் வீட்டை சுற்றி எப்பொழுதும் ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |