அதிமுகவுடன் நடிகர் விஜய் கூட்டணி வைத்து 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெற்றால் திமுக வெற்றி..!If actor Vijay forms an alliance with AIADMK he will get only 30 seats

If actor Vijay forms an alliance with AIADMK he will get only 30 seats

அதிமுகவுடன் நடிகர் விஜய் கூட்டணி வைத்து 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் பெற்றால் திமுக வெற்றி என்பதை உணர்ந்து கொள்ளலாம்..!

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக வெளிவருகிறது, எப்படியாவது இந்த முறை ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என அதிமுக திமுக கடுமையாக இப்பொழுது பணிகளை செய்கிறார்கள்.

தற்போது புதிதாக கட்சி தொடங்கி உள்ள விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்பது கேள்விக்குறி யாரும் கூட்டணி வைக்க விருப்பம் இல்லை என்பது நிதர்சனமான உண்மை தமிழகத்தில் மற்ற தேர்தலை விட இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இரண்டு மிகப்பெரிய மதம் கொண்ட யானைகள் முட்டி மோதுவது போல் இந்த தேர்தல் இருக்கும் குறிப்பாக பணமலை என்பது தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இருக்கும் ஏனென்றால் அதிமுகவிற்கு ஆட்சியைப் பிடித்தாக வேண்டிய சூழ்நிலையும்.

திமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்கிறது திமுக பக்கம் வலுவான கூட்டணி இருக்கிறது ஆனால் அதன் கூட்டணி கட்சிகள் எங்களுக்கு அதிக தொகுதிகள் வேண்டுமென்று இப்பொழுது கேட்கத் தொடங்கி விட்டார்கள் விடுதலை சிறுத்தை குறைந்தபட்சம் எங்களுக்கு 25 தொகுதிகள் வேண்டும்.

அப்பொழுதுதான் தேர்தல் உடன்பாடில் கையப்பம்விடுவோம் என வெளிப்படையாக தெரிவிக்கிறார்கள் நடிகர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார் 80 தொகுதிகள் வேண்டும் என்று கேட்டார்கள் என செய்திகள் வெளிவருகிறது.

ஆனால் அவை அனைத்தும் பொய் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கினால் நடிகர் விஜய்க்கு 20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படாது ஏனென்றால் 80 தொகுதிகள் நடிகர் விஜய்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால் திமுக வெற்றி என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம்.

நடிகர் விஜய்க்கு உண்மையில் 5 சதவீத வாக்குகள் கூட இல்லை என்பதுதான் உண்மையான தகவல் சினிமாவில் வரும் வசனம் போல் தேர்தல் இல்லை, 80 தொகுதிகள் ஒதுக்கினால் அதில் 60 தொகுதிகளில் உள்ள வேட்பாளர்களை திமுக விலைக்கு வாங்கிவிடும்.

60 தொகுதிகள் தொடக்கத்தில் தோல்வி என்றால் ஆட்சியைப் பிடிக்க முடியாது இது அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது.

நடிகர் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறேன், வரலாறு படைக்கப் போகிறேன், சாதனை படைக்க போகிறேன் என பேசிக்கொள்கிறார் இவை அனைத்தும் சினிமாவில் வருவது போல் பேசிக்கொள்ளலாம்.

ஆனால் நிஜத்தில் பணம் மட்டுமே பேசும் என்பதை அவர் நிச்சயம் தேர்தல் நேரத்தில் புரிந்து கொள்வார் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 30 தொகுதிகளுக்குள் பெற்று தேர்தலில் களம் இறங்கினால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை..!

இல்லையென்றால் அதுவும் இல்லை அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு தமிழகத்தில் இருக்கக்கூடிய மற்ற கட்சிகள் தயாராக இருக்கிறார்கள் அதிமுக தேர்தல் செலவை பார்த்துக் கொள்வார்கள் தேர்தல் அனுபவம் இருக்கிறது.

ஸ்டாலின் வேண்டுமா பழனிசாமி வேண்டுமா என்பதுதான் தேர்தல் ஏற்கனவே பழனிசாமி ஆட்சியை பார்த்து விட்டார்கள் நன்றாக இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

ஸ்டாலின் ஆட்சியுடன் ஒப்பிடும்போது குறிப்பாக ஸ்டாலின் ஆட்சியில் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை என்பது உச்ச கட்டத்தில் இருக்கிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment