TNPSC மூலம் தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற வேண்டுமா? அதற்கு இதனை நீங்கள் செய்தால் போதும்..!If you want to get employment through TNPSC Just do this

If you want to get employment through TNPSC Just do this

TNPSC மூலம் தமிழக அரசு வேலைவாய்ப்பு பெற வேண்டுமா? அதற்கு இதனை நீங்கள் செய்தால் போதும் நிச்சயம் உங்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசின் கீழ் சுதந்திரமாக இயங்கி வரும் அமைப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணிக்கு ஏற்ப கல்வித் தகுதி நிர்ணயம் செய்து.

அதற்கு ஏற்ப ஆட்களை தேர்வு செய்து வருகிறது குறிப்பாக TNPSC மூலம் குறிப்பிட்ட சில பணிகளுக்கு மட்டும் செல்ல முடியும் போக்குவரத்து, மருத்துவத்துறை, நிதித்துறை, ஆசிரியர், உள்ளிட்ட பணிகளுக்கு செல்ல முடியாது.

சிவில் சர்வீஸ் பணிகளுக்கு மட்டுமே செல்ல முடியும் சமீப காலமாக தமிழகத்தில் TNPSC தேர்வு எழுதும் இளைஞர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது குறிப்பாக கொரோனா வைரஸிற்கு பிறகு தனியாக துறையில்.

நிலையற்ற வேலை வாய்ப்பு காரணமாக கிராமம் மற்றும் நடுத்தர நகரத்தில் இருக்கும் இளைஞர்கள் அரசு வேலை வேலைவாய்ப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் TNPSC GROUP-1 முதல் GROUP-8 வரை தேர்வு நடத்துகிறது.

இதில் முக்கியமாக GROUP-4 வரை தேர்வு என்பது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது GROUP-6,GROUP-7,GROUP-8 போன்ற தேர்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பு பெற்றாலும் நீங்கள் எதிர்பார்த்த அளவில் அதிகமான ஊதியம் பெற முடியாது நீங்கள் அதிகமான ஊதியம் பெற வேண்டும் என்றால் GROUP-1 அல்லது GROUP-2 மூலம் நீங்கள் பணிக்கு சென்றால்,நீங்கள் குறைந்தபட்சம் 50,000/- ரூபாய்க்கு மேல் ஊதியம் பெற முடியும்.

GROUP-2 தேர்வுக்கு தயாராகுங்கள்..!

நீங்கள் தமிழ் வழி கல்வியை பின்பற்றி இருந்தால் TNPSC மூலம் வேலைவாய்ப்பு பெற வேண்டும் என முடிவு செய்தால் நீங்கள் GROUP-2 தேர்வுக்கு தயாராகுங்கள் முக்கியமாக பிரபலமான தனியார் பயிற்சி மையத்தில் இணைந்து.

2 வருடங்கள் அல்லது 3 வருடங்கள் உங்களுடைய கடினமான உழைப்பை நீங்கள் கொடுக்க வேண்டும் இங்கு GROUP-2 பாடத்திட்டம் GROUP-4 பாடத்திட்டத்துடன் 80% ஒத்துப் போகிறது.

இதன் அடிப்படையில் நீங்கள் GROUP-2 தேர்வுக்கு தயாராகினால் நிச்சயம் GROUP-4 தேர்வில் வெற்றி வாய்ப்பு பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

GROUP-2 தேர்வில் தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றாலும் உங்களுக்கு சமுதாயத்தில் கௌரவமான பதவி கிடைக்கும் அதாவது துணை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், வனக்காப்பாளர், என முக்கியமான பதவிகள் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் GROUP-4 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்று பணிக்கு சென்றாலும் கிராம நிர்வாக அலுவலர், நில அளவையார், வருவாய்த்துறை, இதுபோன்ற மிக முக்கியமான பணிகள் கிடைக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் GROUP-4 தேர்வுக்கு விண்ணப்பம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடக்கிறது ஆனால் தேர்வு எழுத நபர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடக்கிறது ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 8,000 காலி பணியிடங்கள் அறிவிக்கப்படுகிறது.

நீங்கள் 3 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பு பெற வேண்டும் என முடிவு செய்தால் ஒரே ஒரு தேர்வை மட்டும் எழுதுங்கள் GROUP-2 தேர்வுக்கு நீங்கள் தயாராகினால் GROUP-4 தேர்வையும் எழுதலாம்,நீங்கள் உங்களுடைய முழு நம்பிக்கையும் கடின உழைப்பையும் கொடுத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

பாதையில் மாறக்கூடாது..!

TNPSC தேர்வுக்கு  தயாராகி விட்டு அடுத்த 2 வருடங்களில் வேறு துறை தேர்வுக்கு தயாராகினால் நிச்சயம் உங்களால் எந்த துறையிலும் வெற்றி பெற முடியாது தமிழகத்தில் தொடர்ந்து அரசு வேலைவாய்ப்பின் அறிவிப்பு வெளியிடப்பட்டு கொண்டே இருக்கிறது.

போக்குவரத்து துறை, மருத்துவத் துறை, நிதித்துறை, ஆசிரியர், என பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுகிறது உங்களுடைய கல்வி தகுதிக்கு ஏற்ப நீங்கள் பல்வேறு துறைக்கு செல்லம்.

ஆனால் ஒரே ஒரு துறையை தேர்ந்தெடுத்து அதற்கு முழு உழைப்பையும் கொடுத்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும் இங்கு பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அனைத்து துறை வேலைவாய்ப்பிற்கு முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் வெற்றி என்பது மிகவும் அரிதாக இருக்கிறது ஒரு துறையை தேர்ந்தெடுத்து அந்த துறைக்கு மட்டும் முழு உழைப்பையும் கொடுத்தால் மட்டுமே உங்களால் இந்த போட்டி நிறைந்த தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பை பெற முடியும்.

நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு..!

இந்த ஆண்டு அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் நடைபெறுவதால் நிச்சயம் இளைஞர்களிடம் நற்பெயர் பெற வேண்டும்.

என அரசு அனைத்து தேர்வுகளையும் நடத்தும் விரைவான முடிவுகளையும் வெளியிடும் ஒரே ஒரு துறையை மட்டும் தேர்ந்தெடுத்து முயற்சி செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment