Learn basic information about selling or buying land in tamil nadu
நிலத்தை விற்பனை செய்வது அல்லது வாங்குவது தொடர்பாக அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் இன்றைய காலகட்டங்களில் நிலம் என்பது மிகவும் விலை உயர்ந்த சொத்தாக இருக்கிறது.
குறிப்பாக வீடு கட்டுவது, நிலம் வாங்குவது, தங்கம் வாங்குவது, என்பது சிலரின் வாழ்க்கையில் எட்ட முடியாத கனியாக இருக்கிறது காரணம் விலை அந்த அளவிற்கு விண்ணை மூட்டம் அளவில் உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து வருகிறது, தங்கம் விளையும் உயர்கிறது, தமிழக அரசின் தவறான திட்டங்களால் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது.
தமிழகத்தில் இப்போது சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம், செங்கல்பட்டு, இப்படி சென்னை ஒட்டியுள்ள சில மாவட்டங்களில் சில முன்னணி நிறுவனங்கள் நிலம் விற்பனை தொடர்பான பல்வேறு விளம்பரங்களை வெளியிடுகிறார்கள்.
ஒரு நிலத்தை நீங்கள் வாங்குவதற்கு முன்பு தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படை தகவல்கள் இருக்கிறது அதனைப் பற்றி தெரியாமல் நீங்கள் நிலம் வாங்கிக் கொண்டு பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் இருக்கிறது.
ஒரு நிலத்தை நீங்கள் வாங்க முயற்சி செய்தால் அந்த நிலம் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிந்து இருக்க வேண்டும் குறிப்பாக தமிழக அரசு அந்த நிலத்தின் பற்றிய முழு தகவல்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
ஒரு நிலத்திற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள்
பட்டா சிட்டா
பத்திரப்பதிவு
அடங்கல்
நிலத்தின் வரைபடம்
வில்லங்கச் சான்றிதழ்
வரி ரசீது போன்றவை கட்டாயம் தேவை
நீங்கள் வாங்கக்கூடிய நிலம் எப்பொழுது யாரிடம் இருந்தது என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே அந்த நிலத்தில் பிரச்சனைகள் இருக்கிறதா இல்லையா என்பதை உங்களால் எளிதாக கண்டுபிடிக்க முடியும்.
ஒரு நிலத்தை நீங்கள் வாங்க வேண்டும் என முடிவு செய்தால் அந்த நிலம் தொடர்பான பல்வேறு தகவல்களை நீங்கள் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம் அந்த நிலத்தின் சர்வே எண் அல்லது புல எண் போன்றவற்றை தமிழக அரசு அதற்காக உருவாக்கியுள்ளது.
இணையதளத்தில் கொடுத்து நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளது, அந்த மாவட்டத்திற்கான தேர்வு செய்து எந்த வட்டத்தில் உள்ளது, எந்த பஞ்சாயத்தில் உள்ளது, எந்த கிராமத்தில் உள்ளது, போன்றவற்றை உள்ளீடு செய்தால்.
அந்த நிலம் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்கு காண்பிக்கப்படும் அதை நீங்கள் டவுன்லோட் செய்து வழக்கறிஞர், சார்பதிவாளர், கிராம நிர்வாக அலுவலர், உள்ளிட்டவர்களிடம் கொடுத்து,அதில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கிறது
தற்போது ஏழை எளிய மக்கள் தங்களுக்கு என்று சொந்தமாக வீடு வேண்டும் அதற்கு நிலம் வேண்டும் என முடிவு செய்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை சேமித்து மாத தவணையில் நிலம் வாங்குகிறார்கள்.
ஆனால் சில நேரங்களில் அவற்றை கட்ட முடியவில்லை என்றால் தனியார் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகள் பறிமுதல் செய்து கொள்கிறார்கள் அதற்கு முன்பு பல்வேறு விதமான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதாவது நிலத்தின் விலை மதிப்பு, எவ்வளவு ரூபாய் கடன் கொடுக்கப்படுகிறது, அதற்கான வட்டி என்ன எத்தனை வருடம் மாதத் தவணை இதைப் பற்றி முழு தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் அதில் வட்டி சதவீதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் நிலம் வாங்க வேண்டும் என முடிவு செய்தால் அந்த நிலத்திற்கான 70 சதவீத தொகையை நீங்கள் கட்டிவிட்டால் மீதமுள்ள தொகை கூட மாதத்தொகையாக கட்டிவிடலாம்.
இந்த நிலத்தை நீங்கள் எளிமையாக கையாகம் படித்து விடலாம் ஆனால் நிலத்தின் மதிப்பில் நீங்கள் 20 சதவீதம் மட்டுமே பணம் செலுத்தி மீதமுள்ள தொகை மாதம் செலுத்த வேண்டும் என முடிவு செய்தால்.
இது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கக்கூடிய மிகப்பெரிய தவறான செயல் எனவே தமிழகத்தில் தற்போது பல்வேறு விதமான குளறுபடிகள் நடைபெறுகிறது அதாவது நிலம் விற்பனை செய்ய நிறுவனங்கள்.
அதிமுக நடிகர் விஜய் கூட்டணி வைத்து விடக்கூடாது என திமுக பாஜக..!
நிதி நிறுவனங்கள், வங்கிகள் கடன் உதவி செய்கிறது என போலியான விளம்பரங்களை ஏற்படுத்தி நடுத்தர குடும்பங்களை சிக்கலில் சிக்க வைத்துக் கொள்கிறார்கள் எனவே நீங்கள் நிலம் வாங்க வேண்டும் என முடிவு செய்தால்.
70% தொகையை செலுத்திவிட்டு மீதமுள்ள 30% தொகையை மாதம் கட்ட முடிவு செய்தால் நீங்கள் எந்த ஒரு பிரச்சனைகளும் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |