தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக ஒரு ஆசிரியர் கூட பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை..!Not a single teacher has been selected for the job for a year and a half in tn

Not a single teacher has been selected for the job for a year and a half in tn

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக ஒரு ஆசிரியர் கூட பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை..!

திராவிட மாடல் அரசின் ஆட்சியில் ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை என்பது கேள்விக்குறியாக இருக்கிறது இதுபோன்ற கொடுமை எந்த ஒரு ஆட்சி காலத்திலும் நடந்ததில்லை.

ஆசிரியர் பணி கிடைக்க வேண்டுமென தேர்வு எழுதிய அதில் வெற்றி பெற்றும் அழைப்பிதழ் கிடைக்காமலும் வருட கணக்கில் காத்திருக்கும் இளைஞர்களின் வாழ்க்கை என்பது உண்மையில் பரிதாபத்துக்குரியது.

திமுக அமைச்சர்களாக இருக்கும் நபர்களின் பிள்ளைகள் இதுபோன்ற ஒரு அரசு பணிக்கு காத்திருப்பார்களா என்பது கேள்விக்குறி ஆசிரியர் பணிக்கு காத்திருக்கும் இளைஞர்களின் இன்னல்களை சற்று யோசித்துப் பாருங்கள் முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு TNPSC மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தனியாக செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டில் ஒரே ஒரு ஆசிரியர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை இப்பொழுது 2025 ஆம் ஆண்டு பிறந்து 3வது மாதம் தொடங்கிவிட்ட நிலையில் இன்றுவரை நடைபாண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை.

கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி அரசு பள்ளிகளுக்கு 3192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது அவர்களை தேர்ந்தெடுக்க பணி கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் முடிவடைந்தது.

ஆனால் இன்னும் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை அதேபோல் கடந்த ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்ட ஒரே ஆள்தேர்வு அறிக்கை 2768 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கப்பட்ட அறிக்கை தான் ஆனால் அந்தப் பணிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் போட்டி தேர்வு நடத்தப்பட்டாலும்.

இன்று வரை விடைத்தாள்கள் திருத்தப்படவில்லை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது ஆனால் அதன் பின்பு ஓராண்டுகள் முடிவடைந்துள்ளது இன்று வரை ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

2022 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இன்று வரை 3 ஆண்டுகளில் ஆசிரியர் பணிக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் கல்வி பெற்று தயாராக இருக்கிறார்கள் ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படாததால்.

அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது தனியார் பள்ளிக்கு கூட அவர்களால் பணிக்கு செல்ல முடியவில்லை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஒரே ஒரு ஆசிரியரை கூட தேர்வு செய்ய முடியவில்லை என்றால் இந்த வாரியம் எதற்காக செயல்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மீது அரசுக்கு அக்கறை இல்லை தேர்வு நடத்தப்பட வேண்டும் ஆசிரியர்கள் பணிக்கு நியமனம் செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பது கிடைக்கும்.

2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு கூட்டணி இப்படித்தான் அமையும்..!

அரசு பள்ளிகளில் லட்சக்கணக்கான காலியிடங்கள் இருக்கிறது ஆனால் தமிழக அரசு அதனை நிரப்பாமல் இருக்கிறது 42 கோடி கார் பந்தயம் நடத்தும் தமிழக அரசுக்கு முதன் முதலில் வீட்டில்.

படித்துவிட்டு அரசு வேலைவாய்ப்பு பெற்று விடலாம் என கனவோடு உழைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வாழ்க்கையில் இந்த திராவிட மாடல் அரசு விளையாடிக் கொண்டிருக்கிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment