NTK Party executives who held key positions in 2021 and 2024 have left
2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு முக்கிய பொறுப்புகளில் இருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வெளியேறி விட்டார்கள்..!
தற்போது ஒவ்வொரு நாளும் முக்கிய பதிவில் இருக்கும் நிர்வாகிகளும் மாவட்ட நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகிக் கொண்டே இருக்கிறார்கள்.
இப்படியே நிலைமை இருந்தால் நிச்சயம் இந்த 8 சதவீத வாக்குகளை சீமானால் 2026 ஆம் ஆண்டு தக்க வைத்துக் கொள்ள முடியாது,வாக்கு சதவீதம் என்பது 3 சதவீதத்திற்கு குறைவாக சென்றுவிடும் அதன் பிறகு கட்சி என்பது காணாமல் போய்விடும்.
இப்பொழுதே சரியான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் விஜய் மறுபுறம் களம்இறங்குகிறார், இப்படி இருக்கும் சூழ்நிலையில் சீமான் இப்பொழுது கட்சியை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை, சீமானுக்கு அதிகார பலம் வேண்டும் இல்லை என்றால் கட்சி நிலைத்து நிற்க முடியாது.
சீமான் கட்சியில் குறைந்தபட்சம் 20 MLA க்கள் இருந்தால் கட்சியை உயிருடன் வைத்திருக்க முடியும் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் விலகல் என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது.
சீமான் என்னதான் சிரித்த முகத்துடன் வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம் செல்பவர்களுக்கு நாங்கள் நன்றி செல்கிறோம் என்று தெரிவித்தாலும் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது காளியம்மாள் விலகியது என்பது நாம் தமிழர் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தும்.
காளியம்மாள் எங்கள் கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள் என தமிழக வெற்றிக்கழகம் அழைத்துக் கொண்டு இருக்கிறது இப்படி இருக்கும் சூழ்நிலையில் 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிர்வாகிகள்.
அனைவரும் வெளியேறிவிட்டார்கள் இப்பொழுது 5ம் கட்ட, 6ம் கட்ட தலைவர்கள் மட்டுமே நாம் தமிழர் கட்சியில் இருக்கிறார்கள் சீமான் கடுமையாக போராடி வருகிறார் 2026 ஆம் ஆண்டு சீமான் தனித்து நிற்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இப்பொழுதே ஒரு தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்துவிட்டார் ஆனால் 2026 ஆம் ஆண்டு தேர்தல் என்பது அவ்வளவு எளிதாக இருக்காது இரண்டு யானைகள் மோதுவது போல் இருக்கும் அதிமுக, திமுக இரண்டும் மிக பலத்துடன் களத்தில் இறங்கும் எவ்வளவு வேண்டுமானாலும் பணம் செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.
அப்படி இருக்கும் சூழ்நிலையில் யாருடைய பலமும் இல்லாமல் தேர்தலில் நின்றால் நிச்சயம் தோல்வி என்பது நிற்கக்கூடிய வேட்பாளருக்கு நன்றாக தெரியும் ஏன் தேவையில்லாமல்.
பணத்தை செலவு செய்ய வேண்டும், உடல் உழைப்பு செலவு செய்ய வேண்டும் என்ற மனநிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் இருக்கிறார்கள்.
இந்தி மொழிக்கு ஆதரவாக தமிழக பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது..!
திமுக இருக்கும் வரை நம்மளுடைய கட்சியை உடைத்துக் கொண்டே இருப்பார்கள் திமுகவை எதிர்த்து தனியாக போராட முடியாது எனவே திமுகவை தோற்கடிப்பதற்கு நீங்கள் உங்களுடைய கொள்கையில் சில முடிவுகளை மாற்றியாக வேண்டும்.
என முக்கிய நிர்வாகிகள் வேண்டுகோள் வைக்கிறார்கள் ஆனால் சீமான் அதற்கு உடன்படவில்லை இதனால் வேறு வழி இன்றி நிர்வாகிகள் வெளியேறிக் கொண்டே இருக்கிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |