People do not have faith in the budget to be presented in TN tomorrow
நாளை தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு திமுக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கும்.
ஆனால் இவைகள் வாக்குறுதிகளாக மட்டுமே இருக்கும் தவிர நிறைவேற்றப்படாது கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று சட்டசபைக்குள் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆனால் அந்த அறிவிப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் உண்மை தமிழ்நாட்டிற்கு தனியாக பேமெண்ட் வங்கி தொடங்கப்படும் அதன் மூலம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் பண பரிவர்த்தனை செய்யலாம் இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று தெரிவித்தார்கள்.
பெட்ரோல் மீது 5 ரூபாயும், டீசல் மீது 3 ரூபாயும் குறைக்கப்படும் என தெரிவித்தார்கள் அது செயல்முறைப்படுத்தப்படவில்லை, எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்கள் அதுவும் செயல்முறைப்படுத்தவில்லை.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய வல்லுநர்கள் குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்கள் அதுவும் செயல்படுத்தப்படவில்லை ஆதார் அட்டை போலவே தமிழக மக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என தெரிவித்தார்கள் அதுவும் செயல்படுத்தப்படவில்லை.
மிக விரைவில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்கள் அதுவும் செயல்படுத்தப்படவில்லை தமிழ்நாட்டின் கடன் திருப்பி செலுத்தப்படும் என தெரிவித்தார்கள் வழக்கத்திற்கு மாறாக தமிழ்நாட்டின் கடன் தற்போது 9 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது.
திமுக அரசு பொறுப்பேற்று முதல் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது தமிழக வரலாற்றில் இது போன்ற கடன் வாங்கி அரசை நடத்திய அரசு யாரும் இல்லை திமுக அரசு மட்டும் இதை சாரும்.
10 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக அரசு 3.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே கடன் பெற்றது தமிழகத்தின் நிதி வளர்ச்சி அதிகரித்தது, பொருளாதார வளர்ச்சி அதிகரித்தது, தொழில் வளர்ச்சியும் அதிகரித்தது, ஆனால் நான்கு ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் என்பது திமுக ஆட்சியில் நடைபெற்றது.
சென்னையில் கழிப்பறை ஊழல் 1,200/- கோடி ரூபாய் என செய்தித்தாள்களில் செய்தி வெளிவந்தது பிரபல youtube சவுக்கு சங்கர் தன்னுடைய யூடியூப் சேனலில் அதைப்பற்றி தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது திமுக அரசு பட்ஜெட் குறித்து சமூகவலைத்தளங்கள் செய்தித்தாள்களிலும் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது அது மக்களிடத்தில் எடுபடவில்லை மக்கள் அதை சாதாரணமாக கடன் செல்கிறார்கள்.
ஏனென்றால் ஒரு முறை பொய் சொன்னால் மக்கள் அதன் மீது நம்பிக்கை கொள்வார்கள் தொடர்ந்து பேசுவது அனைத்தும் பொய் என்றால் மக்களுக்கு நன்றாக புரிந்து விட்டது இவர்கள் வெற்று அறிக்கை மட்டுமே வெளியிடுவார்கள்.
எடப்பாடி பழனிசாமிக்கும் தமிழக முதல்வருக்கும் இப்போது கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது..!
ஆனால் அதனை நிறைவேற்றப்பட மாட்டார்கள் எனவேதான் இவர்கள் என்ன பேசினாலும் அதை கண்டுகொள்ளாமல் சென்று விடலாம் என்ற மனநிலையில் தமிழக மக்கள் இப்பொழுது இருக்கிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |