நடிகர் விஜய்க்கு 8 சதவீத வாக்குகள் இல்லை என்பதை பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்..!Prashant Kishore says that actor Vijay does not have 8 percent votes

Prashant Kishore says that actor Vijay does not have 8 percent votes

நடிகர் விஜய்க்கு 8 சதவீத வாக்குகள் இல்லை என்பதை பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்..!

அவர் தந்தி டிவிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார் நடிகர் விஜய்க்கு 20% வாக்குகள் இருக்கிறது என்பது போலியானது எந்த ஒரு சினிமா நடிகருக்கும் இவ்வளவு வாக்கு சதவீதம் உடனடியாக கிடைக்காது.

சினிமா நடிகர் சினிமாவில் இருப்பதால் தமிழக முழுவதிலும் பிரபலமாக இருப்பார் ஆனால் அரசியல் என்பது வேறு சினிமா என்பது வேறு என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள் இப்பொழுது விஜய் பக்கம் இருக்கும் சில நபர்கள் 20% வாக்குகள் இருக்கிறது என தெரிவிக்கிறார்கள்.

இது முற்றிலும் பொய் அதிமுக 33 சதவீத வாக்கு திமுக 26 சதவீத வாக்குகள் மற்ற சிறு சிறு கட்சிகள் சொற்ப அளவில் வாக்குகள் வைத்துள்ளார்கள் விஜய் எவ்வளவு வாக்குகள் வைத்திருக்கிறார் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் மிகப்பெரிய ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு அதிமுகவுடன் அதிக சீட்டு பேரம் பேசுவது அல்லது விஜய் தலைமையில் பாமக அல்லது விடுதலை சிறுத்தை மற்றும் இன்னும் சில கட்சிகளை இணைத்து தேர்தலில் நிற்பது என்பது விஜயின் யோசனை.

ஆனால் இவை இரண்டுமே செயல்படாமல் போகும் ஏனென்றால் விஜய் கட்சியில் இருக்கும் நபர்கள் அனைவரும் சிறு வயது நபர்கள் அவர்களிடம் பணம் இல்லை தேர்தல் அனுப்பவும் இல்லை எப்படி வேலை செய்ய வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாது.

ஆனால் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணிக்கு சென்றால் அனைத்து வேலையும் அவர்கள் செய்துவிடலாம் நமக்கு எந்த ஒரு தொந்தரவும் கிடையாது பணக்கஷ்டம் கிடையாது என்பதை மற்ற கட்சிகள் உணர்ந்துள்ளார்கள்.

நடிகர் விஜய் இதுவரை எத்தனையோ முயற்சி செய்து விட்டார் கூட்டணிக்கு, ஆனால் யாரும் போகவில்லை அவர்களுக்கு நன்றாகத் தெரியும் சினிமா பிரபலத்தை நம்பி சென்றால் நிச்சயம் நடுத்தெருவில் நிற்போம் என்று.

அதிமுக தெரிவித்த கண்டிஷன்கள்..!

நடிகர் விஜய் அதிமுகவுடன் கூட்டணி பேசியுள்ளார் அதற்கு அதிமுக தரப்பில் இருந்து நிச்சயம் ஆட்சியில் பங்கு என்பது கிடையாது, அதிகாரத்தில் பங்கு என்பதும் கிடையாது, கூட்டணி வைத்தால் நீங்கள் 20 அல்லது 25 தொகுதிகளில் வெற்றி பெறலாம்.

எதிர்கட்சியாக அந்தஸ்து கிடைக்கும் என்பது உண்மை அதன் பிறகு உங்களுடைய கட்சி வளர்வது, கட்சியை காப்பாற்றுவது, உங்களுடைய திறமை ஆனால் எங்களிடம் அதிகார பலம் இதையெல்லாம் நம்பி நீங்கள் கூட்டணி பேச வேண்டாம் என கரராக அதிமுக தெரிவித்துவிட்டது.

திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எங்களுக்கு அதிக தொகுதி வேண்டும் என இப்பொழுதே அடம்பிடிக்கிறார்கள் திமுக கட்டாயம் நாங்கள் 200 தொகுதிகளில் நிற்போம் என்று உறுதியாக தெரிவித்து விட்டது.

அப்படி இருக்கும் சூழ்நிலையில் இரு கட்சிகள் அதிமுகவுடன் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது பாமக நிச்சயம் விஜய் நம்பி செல்லாது பாமகவுக்கு வேறு வழியில்லை ஒன்று அதிமுக அல்லது திமுக.

விடுதலை சிறுத்தை கட்சிக்கும் அதே நிலைமைதான் காங்கிரஸ் நிச்சயம் திமுகவை விட்டு வெளியே வராது மற்ற இரண்டுமார்க்சிஸ்ட் கட்சிகள் வெளியே வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது இதனால் நடிகர் விஜய்யை யாரும் கண்டு கொள்ளவில்லை.

விஜய் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை..!

சினிமா பிரபலங்கள் இரண்டு வருடம் அரசியலுக்கு வருவார்கள் அதன்பிறகு அவர்களால் நிலைத்து நிற்க முடியாது முக்கியமாக விஜய் கூட இருக்க நபர்கள் அனுபவம் இல்லாமல் 18 முதல் 25 வயதிற்குள் இருக்கும் சிறிய நபர்களிடம் எப்படி தேர்தலில் பணியாற்ற முடியும்.

என்பது கேள்விக்குறி நடிகர் விஜய்க்கு உண்மையில் தமிழகத்தில் 5 சதவீத வாக்குகள் கூட இல்லை என்பதுதான் உண்மையான விஷயம் இதை விஜய் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அவரால் அரசியல் செய்ய முடியும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment