Seeman criticizes Vijay for acting well like a Muslim
நடிகர் விஜய்யைகடுமையாக விமர்சனம் செய்த சீமான் இஸ்லாமியர்கள் போல் சிறப்பாக நடிக்கிறார் என்று..!
நடிகர் விஜய் கட்சி தொடங்கியது முதல் சீமான் விஜய்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் விஜயின் விக்ரவாண்டி மாநாட்டில் தன்னுடைய கொள்கைகளை பற்றி விஜய் அறிவித்த போது சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அது எப்படி திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றாக இருக்க முடியும் ஒன்று திராவிடமாக இரு இல்லை என்றால் தமிழ் தேசியமாக இரு திராவிடமும் தமிழும் என்னுடைய இரு கண்கள் என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசியலில் கொள்கையில் யார் மாறுபட்டாலும் அவர்கள் எனக்கு அரசியல் எதிரி என வெளிப்படையாக தன்னுடைய கருத்தை முன் வைத்தார் இதற்கு அரசியல் வல்லுநர்கள் மற்றும் சில முக்கிய தலைவர்கள் சீமான் மீது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார்கள்.
அதாவது விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் நிச்சயம் சீமானுடன் கூட்டணி வைப்பார் அதில் சீமான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது இதனை சீமான் எதிர்பார்க்கிறார்.
சீமானுக்கும் நடிகர் விஜய்க்கு ஏற்கனவே கூட்டணிக்குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது அதில் உடன்பாடு எட்டவில்லை நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்னிடம் தான் கூட்டணி வைக்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.
30 தொகுதிகள் ஒதுக்கிறேன் எனவும் சீமான் தெரிவித்ததை விஜய் ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் கடுமையான கோபத்தில் விஜய் மீது சீமான் இருக்கிறார் என பல்வேறு தகவல்கள் சங்க சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்திகளில் வெளிவந்தது.
விஜய் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் ஒவ்வொரு நகர்வுகளுக்கும் சீமான் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார் தற்போது ரமலான் நோன்பு கொண்டாடப்பட்டது விஜய் முதன் முதலில் சென்னை ராயப்பேட்டையில் 2000 பேர் உணவு அருந்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு.
அப்போது ரமலான் நோன்பு கொண்டாடுவதற்கு விஜய் கலந்து கொண்டார் விஜய் அந்த நோன்பில் கலந்து கொள்வதற்கு தலையில் தொப்பி மற்றும் கைலியுடன் வந்தார் அதாவது இஸ்லாமியர்களின் உடை அணிந்து கொண்டு வந்தார்.
இதை தான் தற்போது சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் சினிமாவில் நன்றாக நடிக்கிறார்கள் தற்போது நிஜத்திலும் நன்றாக நடிக்கிறார்கள் நாங்கள் அதுபோன்ற நடிப்பதற்கு தேவையில்லை ஏற்கனவே.
நாங்கள் மக்களிடத்தில் நல்ல பெயரை பெற்றுள்ளோம் விரைவில் உங்களுடைய நாடகம் வெளியில் தெரியும் நீங்கள் திமுகவின் கைக்கூலி கமல் போல் என்று விஜயை சீமான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |