விஜயலட்சுமி பாலியல் பலாத்கார வழக்கு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சீமானுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை..!Seeman faces 6 years in prison if convicted in Vijayalakshmi rape case

Seeman faces 6 years in prison if convicted in Vijayalakshmi rape case

விஜயலட்சுமி பாலியல் பலாத்கார வழக்கு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சீமானுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை..!

நாம் தமிழர் கட்சி மற்றும் சீமான் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது கடந்த 2010 ஆம் ஆண்டு தனி ஒரு நபராக நாம் தமிழர் கட்சியை இயக்குனர் நடிகர் சீமான் தொடங்கினார்.

அப்பொழுது பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை அதன் பிறகு அவருடைய பேச்சாள் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது நாம் தமிழர் கட்சிக்கு நிதி என்பது வெளிநாடுகளில் இருந்து வருகிறது.

குறிப்பாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிக அளவில் சீமானுக்கு நிதி வழங்கி வருகிறார்கள் சீமான் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை வைத்து அரசியல் செய்து வருகிறார்.

பல்வேறு நாடுகளில் இருந்து சீமானுக்கு ஆதரவு வருகிறது குறிப்பாக தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுகவிற்கு எதிராக இருக்கக்கூடிய வாக்குகள் சீமானுக்கு செல்கிறது சீமான் இதுவரை யாருடன் கூட்டணி வைக்கவில்லை.

தேர்தலில் தனித்து இருக்கிறார் குறிப்பாக 234 தொகுதிகள் என்றால் 117 ஆண்கள் 117 பெண்கள் என சமமாக வாக்காளர்களை களத்தில் இறக்குகிறார் இது பல்வேறு இளைஞர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அவருடைய கட்சியில் இளைஞர்கள் கூட்டம் அதிகரிக்கிறது கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சீமான் கட்சி 8 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்று மாநில கட்சியாக அந்தஸ்து பெற்றது.

36 லட்சம் வாக்குகள் பெற்றது சில இடங்களில் 2ம் இடத்தை பிடித்தது 10க்கு மேற்பட்ட இடங்களில் 1,50,000 வாக்குகள் பெற்றது இப்படி சீமான் உச்சகட்டத்தில் இருக்கும்போது தான் திடீரென்று அவருக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டது.

ஏற்கனவே அவருடன் நட்பாக இருந்த சினிமா நடிகை விஜயலட்சுமி பல்வேறு புகார்களை அடுக்கடுக்காக கொடுத்து வருகிறார் மேலும் பல வீடியோக்களும் வெளியிடப்படுகிறது தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக அவர் புகார் கொடுத்தார்.

சீமானுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமை

சீமான் தன்னை திருமண செய்வதாக கூறிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு 6முறை செய்ததாக நடிகர் நடிகை விஜயலட்சுமி புகார் கொடுத்து இருந்தார் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்.

சீமான் வழக்கு தொடுத்திருந்தார் அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்து விட்டது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது அதனால் அவருக்கு ஆண்மை மற்றும் குரல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் கரு கலைப்பு செய்யப்பட்டபோது கணவர் என்ற இடத்தில் சீமான் கையொப்பமிட்ட ஆவணம் வசமாக காவல்துறையிடம் சிக்கிக் கொண்டது இதுதான் தற்போது சீமானுக்கு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் என்ன நடக்கும்

இந்த பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நாம் தமிழர் என்ற ஒரு கட்சி முற்றிலும் காணாமல் போக வாய்ப்புகள் இருக்கிறது ஏனென்றால் ஒரு குற்றவாளியை பின் தொடர இளைஞர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

அதுவும் பாலியல் குற்றவாளி என்றால் சீமானுடைய எதிர்காலம் முற்றிலும் கேள்விக்குறியாகிவிடும் சீமானிடம் இருக்கும் வாக்குகள் அனைத்தும் நடிகர் விஜய் பாக்கம்.

செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது தற்போது சீமானுக்கு இக்கட்டான சூழ்நிலையால் என்ன நடக்கும் என்ன நடக்கும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

தொடர்ந்து வெளியேறும் நிர்வாகிகள்

நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருகிறார்கள் தினந்தோறும் மாவட்ட செயலாளர்கள் வெளியேறுகிறார்கள் அந்த கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த காளியம்மாள் நேற்று கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டு விட்டு வெளியேறிவிட்டார்.

கரூரில் 10ம் வகுப்பு மாணவி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதி என்ன நடந்தது..!

இன்னும் சாட்டை துரைமுருகன், இடுபவன் கார்த்திக் உள்ளிட்ட சில முக்கிய இளைஞர்கள் மட்டுமே அந்தக் கட்சியில் இருக்கிறார்கள் சீமானுக்கு குற்றச்சாட்டை நிரூபிக்கப்பட்டால் நாம் தமிழர் என்ற ஒரு கட்சி காணாமல் போய்விடும்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சீமானுக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என சட்ட வல்லுனர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment