Seeman says he will not be able to appear for police questioning
சீமானுக்கு அரசியலில் பல்வேறு சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளது முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறி வருகிறார்கள் மேலும் திமுக எப்படியாவது சீமானை அவமானப்படுத்த வேண்டும் என பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சீமான் பெரியாரை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் பெரியார் தமிழர்களுக்கு துரோகி பெரியார் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தன்னுடைய ஆழமான கருத்தை முன்வைத்து வருகிறார்.
சீமானுக்கு இருக்கக்கூடிய பிரச்சனை
கடந்த 2011 ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதில் தன்னை சீமான் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து பாலியல் வன்புணர்வு செய்து விட்டார் 6 முறை கருக்கலைப்பு நடைபெற்றுள்ளது என புகார் கொடுத்தார்.
அதன்பிறகு இரண்டு மாதத்தில் அந்த புகாரை திரும்ப பெற்றுக் கொண்டார் மீண்டும் 2 வருடங்களுக்கு முன்பு அந்த புகாரை கொடுத்துள்ளார் இது சம்பந்தமாக சீமானிடம் விசாரணை நடத்த காவல்துறை நோட்டீஸ் அனுப்பியது.
அப்போது சீமான் நான் ஆஜராகிறேன் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கிறது என தெரிவித்துள்ளார் ஆனால் காவல்துறை இன்று அவருடைய வீட்டில் நோட்டீஸ் ஒட்டியது அப்போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி அந்த நோட்டீசை கிழித்துள்ளார்.
சீமான் வீட்டிற்குள் நுழைய முயன்ற காவல்துறையே பாதுகாப்பு பணியில் இருந்த முன்னாள் ராணுவ வீரர் அமல்ராஜ் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளார் இதனால் காவல்துறை அவரை வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியது.
இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது சீமான் வீட்டு காவலாளியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியில் இருந்து 20 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சீமான் வழக்கறிஞர்கள் தெரிவித்த கருத்து
சீமான் வழக்கறிஞர்கள் குழு சீமான் வீட்டு காவலாளி காவல்துறையை தாக்க வில்லை அரசியலுக்காக நெருக்கடி கொடுக்கப்படுகிறது முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்ற துப்பாக்கிய காவலாளி வைத்துள்ளார்.
நோட்டீஸ் ஒட்டியபின் அதிலுள்ள தகவலை தெரிந்த பின்னரே கேட்டுள்ளார்கள் சீமான் வீட்டில் குண்டு வீச போவதாக வந்த தகவல்களால் காவலாளி துப்பாக்கியுடன் இருந்தார் என்று சீமான் வழக்கறிஞர்கள் குழு தெரிவித்துள்ளது.
ஓசூரில் சீமான் தெரிவித்த கருத்து
நான் ஏற்கனவே குறிப்பிட்ட தேதியில் காவல்துறையினர் அனுப்பிய நோட்டீசுக்கு ஆஜராகிறேன் என தெரிவித்தேன் இருந்தாலும் என்னுடைய வீட்டிற்கு சென்று பல்வேறு கலோபரங்களை செய்துள்ளீர்கள்.
தமிழகத்தில் 255 ஆசிரியர்கள் பாலியல் குற்றவாளிக்கில் கைது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!
இதனால் ஆஜராக மாட்டேன் உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள் என்னை உங்களால் கைது செய்ய முடியாது என சவால் விடுத்துள்ளார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |