நிலத்தை அளவீடு செய்ய நீங்கள் அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் இணையதளத்தில் நில அளவை வசதி தொடங்கப்பட்டு விட்டது..!Tamil Nadu government launches online land survey facility

Tamil Nadu government launches online land survey facility

இனி உங்களுடைய நிலத்தை அளவீடு செய்ய நீங்கள் அரசு அலுவலகத்திற்கு செல்ல வேண்டாம் இணையதளத்தில் நில அளவை வசதி தொடங்கப்பட்டு விட்டது..!

உங்களுடைய நிலம் எதுவாக இருந்தாலும் விவசாய நிலம் அல்லது தரிசு நிலமாக இருந்தாலும் நிலத்தை அளக்க இணையம் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளக்க பொது சேவை மையங்களை அணுகி அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்கலாம் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் ஒரு நிலத்தை வாங்குகிறீர்கள் அல்லது விற்பனை செய்கிறீர்கள் எனில் குறிப்பாக அதற்கு பட்டா, பத்திரப்பதிவு, அடங்கல், வில்லங்கச் சான்றிதழ், நிலம் வரைபடம், போன்ற பல்வேறு ஆவணங்கள் தேவை அதில் நில அளவுகள் சரியாக இருக்கிறதா என்பதை முதலில் நீங்கள் கவனிக்க வேண்டும்.

சில நேரங்களில் பட்டா சிட்டா, பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்றிதழ், போன்றவற்றில் இருக்கும் அளவீடு நிலத்தின் வரைபடத்தில் இருக்காது இப்படி இருக்கும் சூழ்நிலையில் நிலத்தை உங்களால் அவசரத்திற்கு விற்பனை செய்ய முடியாது அல்லது அதன் மூலம் வங்கிகளில் கடன் பெற முடியாது.

முன்பெல்லாம் நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என்றால் நீங்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று அதற்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் பொதுமக்கள் தங்கள் நிலத்தை அளவீடு செய்வதற்கு இதுவரை நேரில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.

இதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை பொதுமக்கள் சந்தித்தார்கள் இதற்கெல்லாம் ஒரு தீர்வை அரசு தற்போது கொடுத்துள்ளது அதன்படி தமிழ்நாடு அரசு நிலம் தொடர்பான இணை வழி சேவையை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவிட செய்ய சம்பந்தப்பட்ட வட்டார அலுவலர்களுக்கு நேரில் செல்லாமல் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் வசதியே தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இதனை பொதுமக்களுக்கு அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவிட செய்ய சம்பந்தப்பட்ட வட்டார அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்த நிலையில்.

தற்போது https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது இந்த புதிய சேவை மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய எந்த நேரத்திலும் எங்கிருந்தும் கட்டணத்தை செலுத்தலாம்.

இணையதளம் மூலமாக கட்டணத்தை செலுத்தி நீங்கள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கும் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தி திணைப்பை நிரூபித்தால் 99 லட்சம் பரிசு என பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது..!

நிலத்தை அளவீடு செய்யும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும் மேலும் நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவை கையொப்பமிட்ட அறிக்கை வரைபடம்.

இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் நீங்கள் எப்பொழுதும் போல் பதிவிறக்கம் செய்வது அதன் பிறகு உங்களுடைய புதிய நில அளவை வரைபடத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment