தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது..!The impact of the heat is increasing every day in Tamil Nadu

The impact of the heat is increasing every day in Tamil Nadu

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது..!

உலக வெப்பமயமாகுதல் காரணமாக பருவநிலை மாறிவிட்டது தற்போது உலகம் முழுவதும் பல்வேறு இயற்கை மாற்றங்கள் அவ்வப்போது திடீரென்று நிகழ்கிறது.

தமிழகத்திலும் இது அதிகமாக நடைபெறுகிறது குறிப்பாக ஒரு வருடத்தில் கிடைக்கக்கூடிய பருவமழை ஒரே நாளில் பொழிந்து விடுகிறது கோடை காலம் தமிழகத்தில் மார்ச் மாதத்தில் தொடங்கி மே மாதத்தில் உச்சகட்டம் அடையும்.

ஆனால் தற்போது ஜனவரி 20ஆம் தேதி முதல் வெயிலின் தாக்கம் தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது இப்பொழுது மார்ச் 7 வெயிலின்ன் தாக்கம் உச்சகட்டத்தில் இருக்கிறது.

காலை 10 மணி முதல் வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கிறது மாலை 5 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது குறிப்பாக மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சகட்டத்தில் இருக்கிறது.

தமிழகத்தில் கட்டுமான பணிகள் அதிகமாக நடைபெற்று வருவதால் வெயிலின் தாக்கம் காரணமாக தொழிலாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் இதனால் கட்டுமான பணிகளின் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து விட்டார்கள் தமிழகத்தில் இப்பொழுது சராசரியாக வெப்பநிலை 33 முதல் 35 வரை டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பல்வேறு மாவட்டங்களில் பதிவாகி வருகிறது.

குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருப்பூர், கோவை, மதுரை, கரூர், சிவகங்கை, நாமக்கல், திருச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இப்பொழுது அதிகரிக்க தொடங்கிவிட்டது.

இனி வரும் காலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது எனவே பொதுமக்கள் முடிந்தவரை மதியம் நண்பகல் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுக்கு..!

முக்கியமாக விவசாய பணி, கட்டுமான பணி, செய்யும் நபர்கள் வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளை வெளியில் விட வேண்டாம்.

எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது குழந்தைகளுக்கு மார்ச் மாதம் வரை பள்ளிகள் நடைபெறும் ஏப்ரல், மே என இரண்டு மாதமும் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment