இந்தி மொழிக்கு ஆதரவாக தமிழக பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது..!TN BJP launches signature drive in support of Hindi language

TN BJP launches signature drive in support of Hindi language

இந்தி மொழிக்கு ஆதரவாக தமிழக பாஜக கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது..!

தமிழகத்தில் தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் படித்த குழந்தைகள் இன்று பல்வேறு முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள்.

தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் இருக்கிறார்கள் தமிழகத்தில் பாஜக மட்டுமே மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

இது குறித்து தமிழக முழுவதிலும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழி போதும் 3வது ஒரு மொழி தேவை இல்லை 3வது ஒரு மொழி தேவைப்படும் இடத்தில் ஆங்கிலத்தில் இன்னும் வலுமையான அறிவு வளர்த்துக் கொண்டால் போதும்.

உலகில் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம் அல்லது படிக்கலாம் என்ற கொள்கையை தமிழக மக்கள் தெரிவித்துள்ளார்கள் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கக்கூடிய 2,000/- கோடி ரூபாயை வழங்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீங்கள் பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது இது குறித்த கடந்த மார்ச் 5ஆம் தேதி தமிழக முழுவதும் பல்வேறு கூட்டங்கள் கருத்தரங்கள் மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசும் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்டி மும்மொழி கொள்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது அதில் நிச்சயம் 3வது மொழி இந்தியை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

3வது மொழிக்கு அறிவு முக்கியமில்லை தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழி பயிற்றுவித்தால் போதும் 3வது மொழி பயிற்றுவிக்கும் நேரத்தில் மாணவர்களுக்கு அறிவுப்பூர்வமாக வேறுஒன்றை பயிற்றுவிக்கலாம் என பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்.

இரண்டு மொழியில் படித்த இளைஞர்கள் தான் இன்று அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, போன்ற நாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே 3வது மொழி ஒன்று தேவை இல்லை 3வது மொழி கற்றுக் கொள்ளும் நேரத்தில் ஆங்கிலத்தை இன்னும் நன்றாக கற்றுக்கொண்டால் போதும் எங்கு வேண்டுமானாலும் சென்று பணி செய்யலாம் என மக்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

இந்தி மொழி வேண்டாம் என்று தமிழகத்தில் அனைத்து கட்சிகளும்

தமிழகத்தில் பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளும் மும்மொழி கொள்கைக்கு எதிராக இருக்கிறார்கள் பாஜக தற்போது இந்தி மொழிக்கு ஆதரவாக தமிழக முழுவதும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளது.

இதற்கு கடுமையான எதிர்ப்பு தமிழக மக்களிடத்தில் கிளம்பியுள்ளது நிச்சயம் 2026 சட்டசபை தேர்தலில் இந்த மும்மொழிக் கொள்கை தொடர்பான கருத்து எதிரொலிக்கும் எனவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒன்றரை ஆண்டுகளாக ஒரு ஆசிரியர் கூட பணிக்கு தேர்வு செய்யப்படவில்லை..!

நிச்சயம் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் யாரும் கூட்டணி வைக்க மாட்டார்கள் எனவும் தங்களுடைய கருத்துக்களை அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் அப்படி பாஜகவுடன் கூட்டணி வைத்த கட்சி நிச்சயம் வெற்றி பெறாது எனவும் தெரிவித்துள்ளார்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment