வனக்காப்பாளர், வனகாவலாளர் பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கால அவகாசம் நீட்டிப்பு..!TNPSC has given the last chance to upload certificates till March 9th

TNPSC has given the last chance to upload certificates till March 9th

TNPSC குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியாரமான செய்தி அல்லது வனக்காப்பாளர், வனகாவலாளர் பணிகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு கால அவகாசம் நீட்டிப்பு..!

கடந்த ஆண்டு TNPSC Group 4 தேர்வு நடத்தப்பட்டது அதற்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளது 9,000 மேற்பட்ட இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் இளைஞர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் வனக்காவலாளர், வனக்காப்பாளர் பணிகளுக்கு தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் இதற்காக கால அவகாச தற்போது மார்ச் 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC  வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் Group 4 பணிகளில் அடங்கிய வனக்காவலாளர், வனக்காப்பாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்வதற்கு.

விண்ணப்பதாரர்களால் சான்றிதழ் பதிவேற்றம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் பல்வேறு விண்ணப்பதாரர்களிடம் இருந்து உரிய சான்றிதழ்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் விதமாக மார்ச் 9ம் தேதி இரவு 12 மணி வரை விடுபட்ட மற்றும் சரியாக பதிவேற்றம் செய்யப்படாத சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ கண்டு கொள்ளாமல் கடந்து சென்ற மக்கள்..!

விண்ணப்பதாரர்கள் அனைவரும் TNPSC மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ள, கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் தேர்வாணையம் இணையதளத்தில் கட்டாயம் ஒருமுறை பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

அவ்வாறு சான்றிதழ்களை விண்ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்யவில்லை என்றால் அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்படும் என TNPSC தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment