Vijay released video saying DMK must be defeated in 2026 election
திமுகவை நிச்சயம் 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்ட நடிகர் விஜய்..!
நடிகர் விஜய் திமுகவை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும் என்று வெளியிட்ட வீடியோ திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது முதல் இதுவரை திமுகவை மறைமுகமாக விமர்சித்து வந்தார்.
ஆனால் மகளிர் தினத்தன்று முதன்முதலாக வீடியோ வெளியிட்டு திமுகவிற்கு வாக்களித்தது தவறாக சென்று விட்டது நாம் அனைவரும் சேர்ந்து மறுபடியும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என செய்தி வெளியிட்டார்.
இது நிச்சயம் திமுகவிற்கு பேரிடியாக அமைந்தது 2021 ஆம் ஆண்டு நடிகர் விஜய் திமுகவிற்கு ஆதரவாக சைக்கிளில் சென்று வாக்களித்தார் அப்பொழுது கருப்பு சிகப்பு ஆடைகள் பயன்படுத்தினார் இதனால் அவருடைய ரசிகர்கள் அதிகமாக திமுகவிற்கு வாக்களித்தார்கள்.
அதன் பிறகு தமிழ்நாட்டின் நிலைமை என்பது அனைவருக்கும் புரியும் இங்கு பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் POCSO Act சட்டத்தின் கீழ் கைது என்பது அதிகரித்து வருகிறது இது நிச்சயம் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை உணர்த்துகிறது.
போதைப்பொருள் நடமாட்டம் என்பது உச்ச கட்டத்தில் இருக்கிறது, குறிப்பாக பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து இருக்கிறது இதை உணர்ந்து தான் நடிகர் விஜய் இதுபோன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக மகளிர் தினத்தன்று வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் விஜய் 2021 ஆம் ஆண்டு நாம் அனைவரும் ஒன்றிணைந்துதான் இந்த திமுக அரசை கொண்டு வந்தோம் ஆனால் அவர்கள் நம்மளை ஏமாற்றி விட்டார்கள்.
இனி நிச்சயம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் இங்கு மாற்றங்கள் எப்பொழுதும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது இன்னும் சரியாக ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது என தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளம் முழுவதும் பரவியது இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள் மேலும் திமுக குறித்த விமர்சனம் என்பது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது விஜய் கடந்த சில நாட்களாகவே திமுகவை தோற்கடிக்க வேண்டும் என தொடர்ந்து பேசி வருகிறார்.
இது திமுகவிற்கு கடுமையான எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது விஜய் தனியாக நின்றால் நிச்சயம் திமுகவை வெல்ல முடியாது என்பது அவருக்கும் தெரியும் விஜய்யுடன் இதுவரை எந்த கட்சியும் கூட்டணி குறித்து பேசவில்லை.
கூட்டணி வைப்பதற்கும் தயாராக இல்லை அப்படி இருக்கும் சூழ்நிலையில் எந்த தைரியத்தில் விஜய் இதுபோன்ற செய்தியை வெளியிடுகிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது நடிகர் விஜய் ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்.
நிச்சயம் அவர்களுடைய கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பது உறுதியாகிவிட்டது அதிமுகவுடன் மறைமுகமாக கூட்டணி குறித்த நடிகர் விஜய் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை முடித்து விட்டாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மருத்துவர் இல்லாததால் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு கொடுமையிலும் உச்ச கட்டம் தமிழகத்தில் தான் நிகழ்ந்துள்ளது..!
ஆனால் நடிகர் விஜய் ஒவ்வொரு நாளும் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார் இது நிச்சயம் திமுகவிற்கு கடுமையான எரிச்சலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது அதனை சமாளிப்பதற்கு.
திமுக இப்பொழுது விஜய் நடித்த படங்களில் இருக்கக்கூடிய சில முக்கியமான பாடல்களையும் காட்சிகளையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விஜய்க்கு எதிரான தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |