Young woman mixes rat paste in coffee to kill boyfriend
காதலனை கொலை செய்ய காபியில் எலி பேஸ்ட் கலந்த இளம் பெண் அதிரடி கைது..!
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே எலி பேஸ்ட்டை காபியில் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்ய முயற்சியில் தற்போது மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
காபி குடித்த காதலனுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கிறது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கிரீமேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை.
இவருடைய மகன் ஜெயசூர்யா 12-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு அதன் பிறகு அதே கிராமத்தில் இ-சேவை மையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார் 2ம் ஆண்டு கல்லூரி படித்து வந்த ரம்யா அடிக்கடி கடைக்கு வந்துள்ளார்.
அப்பொழுது இரண்டு நபர்களுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது இரண்டு நபர்களும் ஒரே ஊர் என்பதால் இந்த விஷயம் ஊரில் கசிந்துள்ளது அப்பொழுது இரண்டு குடும்பங்களை சேர்ந்த நபர்களும்.
அந்தப் பெண் உனக்கு சகோதரி முறை அதனால் காதலை கைவிட்டுவிடு என தெரிவித்துள்ளார்கள் இதனால் ஜெயசூர்யா மனம் வருந்தி காதலை கைவிட்டு உள்ளார் ஆனாலும் ரம்யா காதலை கைவிடாமல் தொடர்ந்து ஜெயசூர்யாவுக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இனிமேல் இருவரும் சந்தித்துக் கொள்ள முடியாது பேசிக் கொள்ள முடியாது என ஜெயசூர்யா தெரிவித்த நிலையில் ஜெயசூர்யா வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் வெளியூர் சென்ற நிலையில்.
வீட்டிற்கு சென்ற ரம்யா காபி போட்டுக் கொடுக்கவா என்று கேட்டு ஜெயசூர்யா வீட்டில் காபி போட்டு கொடுத்துள்ளார் அப்பொழுது எலி பேஸ்ட் கலந்துள்ளார் அதன்பிறகு வீட்டுக்கு சென்ற ரம்யா WhatsAppல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி உள்ளார்.
அதில் நீ குடித்த காபியில் எலி பேஸ்ட் கலந்து விட்டதாகவும் விரைவில் இறந்து விடுவாய் என தெரிவித்துள்ளார் இதனை நம்பாமல் இருந்த ஜெயசூர்யாவுக்கு சிறிது நேரத்தில் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ஜெயசூர்யா தன்னுடைய உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் தெரிவித்து அவசர அவசரமாக விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சென்னையில் இரவு முழுவதும் மது குடித்த கல்லூரி மாணவி பலி உச்சகட்ட அதிர்ச்சியில்..!
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இதற்கிடையே அவருக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலை அதிர்ச்சிகரமாக ஏற்பட்டுள்ளது ஜெயசூர்யா தந்த ஏழுமலை ரம்யா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதன் பெயரில் கொலை முயற்சி செய்ததாக ரம்யா மீது வழக்கு பதிவு செய்தனர் இதனை அறிந்தும் ரம்யாவின் குடும்பத்தினர் தற்போது தலைமறைவாகியுள்ளார்கள் காவல்துறை தனிபடை அமைத்து தீவிரமான தேடுதல் வேட்டையில்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |